பொது செய்தி

இந்தியா

ஓயாத ‛பிகில்' சத்தம் - விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி., அதிகாரிகள் ஆய்வு

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
Actorvijay, ITRaid, Thalapathy, Bigil,

இந்த செய்தியை கேட்க

சென்னை : ‛பிகில்' படம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஐடி., ரெய்டு தொடர்பாக, பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் இன்று(மார்ச் 12) அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

'பிகில்' படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், பிப்., 5ல், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும், நடிகர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரிடமும், வருமான வரி அதிகாரிகள், 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., உரிமையாளர்கள் அலுவலகம், வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்து உதவிய அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.


latest tamil news



இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இப்படியான நிலையில் விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakti - vilupuram,இந்தியா
12-மார்-202021:43:48 IST Report Abuse
shakti ஒரு மொக்கை படத்தை எடுத்து, அது 500 கோடி யாவாரம் னு புளுகி பாவாடை கும்பலின் தடைசெய்யப்பட்ட என்ஜிஓ கருப்பு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்த கில்லாடி திட்டம் இப்படியா போகணும் ஏசப்பா ???
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
12-மார்-202018:51:05 IST Report Abuse
Mayavan Mayavan பிகில் அடிச்சா ஓடித்தான் ஆகணும். ஓடினா புடிச்சுதான் ஆகணும்.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-மார்-202017:48:38 IST Report Abuse
தமிழர்நீதி தமிழகம் எங்கும் மருத்துவமனை , கல்வி வியாபாரம் , மின்சாரம் விற்கும் அதானி வீடெல்லாம் விட்டுபுட்டு பாவம் விஜயை நோண்டுறார்கள் . திரும்ப இரு ரசிகர்கள் எழுந்தால் ஏவிவிடும் வடநாட்டான் ரஜினிக்கு ஆப்புதான் .
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
12-மார்-202018:51:27 IST Report Abuse
sankarஇதுல ரஜினியை ஏன் கோர்த்து விடுகிறாய் . விஜய் நேர்மையானவர் என்றால் ரைடு குறித்து பயப்பட வேண்டியதில்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X