உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி: சமாளிக்க தேவை ரூ.1,000 கோடி!

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

நியூயார்க்: கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் கோடிக்கணக்கிலான வெட்டுக்கிளிகள், பயிர்களை அழித்து வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.



latest tamil news


குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி அழித்தன. 'காப்பான்' என்ற தமிழ் திரைப்படத்தில், விவசாயத்தை அழிக்க, ஒரு நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். இதை உதாரணமாகக் காட்டி, 'பாகிஸ்தான் தான் குஜராத்திற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பியுள்ளது' என, சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவையும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கத் துவங்கின. வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல், கிழக்கு ஆப்ரிக்கா, ஏமன், வளைகுடா நாடுகள், ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு உள்ளது.


latest tamil news



ஒரு லட்சம் வாத்து

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில், இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்தன. பாகிஸ்தானுக்கு உதவ, சீனா தனது நிபுணர்கள் குழுவை அனுப்பியது. அவர்கள், 'இயற்கையாக வாத்துக்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை. ஒரு கோழி நாள் ஒன்றுக்கு 70 பூச்சிகளை உட்கொண்டால், வாத்து அதைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான பூச்சிகளை உட்கொள்ளும். அதனால், வாத்துகளைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க முடியும்' என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, ஒரு லட்சம் வாத்துக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது சீனா. இருந்தும் வெட்டுக்கிளிகளை முழுமையாக அழித்தொழிக்க முடியவில்லை.


latest tamil news



விமானங்கள் இல்லை!

இந்நிலையில் காங்கோ ஜனநாயக குடியரசை வெட்டுக்கிளிகள் தாக்கின. இதுகுறித்து, கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளி தடுப்பு மையத்தின் தலைவர் ஸ்டீபன் ஜோகா தெரிவித்துள்ளதாவது: வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த சிறிய ரக விமானத்தின் மூலம் வானிலிருந்தும் தரையிலிருந்தும் மருந்து அடிக்க வேண்டும். ஆனால், அதற்கு போதிய விமானங்கள் இல்லை. தற்போது எத்தியோப்பியா ஐந்து விமானங்களையும், கென்யா ஆறு விமானங்களையும் பூச்சி மருந்து தெளிப்பதற்கும், நான்கை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் கென்ய அரசு தங்களுக்கு 20 விமானங்கள் தேவை எனத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளில் வெட்டுக்கிளிகளை கண்காணிக்க 240 பேருக்கு கென்யா பயற்சி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ரூ.1,023 கோடி தேவை!

இந்நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை தடுப்பது குறித்து பாகிஸ்தான், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கன் வேளாண் அமைச்சர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். 'கடந்த ஜனவரி மாதம் வெட்டுக்கிளிகளை சமாளிக்க, 76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.5,63 கோடி) தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது உலகின் பல்வேறு நாடுகளை வெட்டுக்கிளி அச்சுறுத்தி வருவதால், 138 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,023 கோடி) இருந்தால் தான் அவற்றை அழிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
19-மார்-202010:26:44 IST Report Abuse
chander பணம் தானே தேவை அச்சடிக்க சொன்னால் போச்சி
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-மார்-202020:13:31 IST Report Abuse
M.COM.N.K.K. வெட்டுக்கிளியை ஒழிப்பது முக்கியமா கொரோனா வைரஸை ஒழிப்பது முக்கியமா போங்கப்பா
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
12-மார்-202017:13:24 IST Report Abuse
 Sri,India இயற்கை விவசாயத்திற்கு மாறினால் பூச்சிகளை திண்ணும் பருந்துகள் ,தவளை , கழுகுகள் ,ஆந்தைகள் இனம் பெருகும் . அதனால் இது போன்ற வெட்டுக்கிளிகளை தடுக்க முடியும் .என்றைக்கு விவசாயிகள் உர மூட்டையை சுமந்தார்களோ அன்று முதல் விவசாயிகள் கடனாளியானார்கள் ,மக்களுக்கும் சர்க்கரை ,புற்றுநோய்கள் பெருகி விட்டன . பூச்சி மருந்து அடிக்காமல் நம்மாழ்வார் சொன்ன பிரம்மாஸ்திரம் கரைசலான இஞ்சி பூண்டு பசுவின் கோமியம் , மிளகாய் கலந்த கரைசலை பயிரிகளுக்கு தெளித்தால் போதும் எந்த வெட்டு கிளியும் நம் பயிர்களை வீணாக்காது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X