பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 73 ஆக அதிகரிப்பு

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
india, coronovirus, corono, healthministry, harsvardhan, இந்தியா, கொரோனாவைரஸ், கொரோனா, சுகாதாரஅமைச்சகம், ஹர்ஷ்வர்தன், பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ் 119 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகினர். இந்த வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏ்றபடுத்தியுள்ளது. கேரளா, டில்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், இந்தியர்கள் 57 பேர். வெளிநாட்டினர் 17 பேர் ஆவார்கள். இதில், கேரளாவில் 17 பேரும், மஹாராஷ்டிராவில் 11 பேர், உ.பி.,யில் 10 பேர், டில்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


15 ஆய்வகங்கள்



latest tamil news



லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகம், நமது மத்திய ஆய்வகமாக செயல்படுகிறது. கொரோனா வைரஸ் பரவ துவங்கிய பின்னர் 15 ஆய்வகங்கள் துவக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கும் மிகப்பெரிய பணியில், அனைத்து நடவடிக்கைகளும், நாட்டில் உள்ள 51 ஆய்வகங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன். ரத்த சேகரிப்பு மையங்கள் 56 இடங்களில் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி., மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கூறுகையில், கொரோனா தடுப்பு குறித்து, மாநிலம் முழுவதும் 800 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கண்காணிக்கப்படுகிறது. உ.பி.,யில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


விசா ரத்து


கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தூதரக ரீதியிலான விசா, ஐ.நா., மற்றும் சர்வதேச அமைப்பு அதிகாரிகளுக்கான விசா, வேலைவாய்ப்பு விசா தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. விசா இல்லாமல், இந்தியாவில் பயணிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதியும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இது நாளை(மார்ச் 13) முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பிப்.,15க்கு பிறகு சுற்றுபயணம் செய்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பீதி வேண்டாம்


latest tamil news


இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி அகர்வால் கூறுகையில், முகமூடி கட்டாயம் தேவையில்லை. ஒருவர், மற்றவர்களிடம் சற்று தள்ளி இருந்தால், முகமூடி அணிய தேவையில்லை. இதனால், பீதிஅடைய தேவையில்லை. ஒரு லட்சம் சோதனை உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. கூடுதலாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து 900 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Chennai,இந்தியா
12-மார்-202021:50:14 IST Report Abuse
kannan இதிலேயும் கேரளாதான் முதலிடமா??
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-மார்-202020:10:57 IST Report Abuse
M.COM.N.K.K. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க யார் மருந்து கண்டுபிடிக்கிறார்களோ அந்த நாட்டையே நாங்கள் வல்லரசாக ஏற்றுக்கொள்கிறோம்.இல்லையேல் நாங்கள் எந்த நாட்டையும் வல்லரசாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
Rate this:
Cancel
12-மார்-202019:41:47 IST Report Abuse
ஆப்பு நம்ம மக்களுக்கு எச்சரிக்கை, ஜாக்கிரதைன்னு சொன்னாலே தலையில் ஏறாது. யாரும் பயப்பட வேண்டாம், பீதி வேண்டாம்னு சொன்னா எவன் கேக்கப் போறான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X