சரிவில் பொருளாதாரம்; பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
Rahul, rahulgandhi, congress, cong, coronovirus, pmModi, nirmala, nirmalasitharaman, FMNirmalasitharaman, economy, jothiradithyascindiya, bjp, RSS, ராகுல், ராகுல்காந்தி, பிரதமர்மோடி, நிர்மலா, நிர்மலாசீதாராமன், நிதியமைச்சர், பொருளாதாரம், ஆர்எஸ்எஸ், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கொள்கை

புதுடில்லி: பொருளாதார சூழ்நிலை குறித்து பிரதமரும், நிதியமைச்சரும் மவுனம் காப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது:கொரோனா வைரஸ் பிரச்னை மிக தீவிரமாக உள்ளது. ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.கொரோனா அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மவுனம் காக்கிறார்.

அனைவரும், பொருளாதார நிலை குறித்து பார்த்து வருகின்றனர். இந்தியாவின் பலமே, அதன் பொருளாதாரம் தான். ஆனால், மோடியின் கொள்கைகள் அதனை சீரழித்துவிட்டது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும். பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என வழி தெரியாமல் நிர்மலா உள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா பாரதிய ஜனதாவில் சேர்ந்தது பற்றி ராகுல் முதல்முறையாக பேட்டியளித்தார். ''காங்கிரஸ் தனது கொள்கையில் இருந்து வெகுதூரம் சென்று விட்டதாக'' ஜோதிராதித்யா கூறியது பற்றி அப்போது ராகுலிடம் கேட்கப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - ஆர்எஸ்எஸ் இடையே கொள்கை மோதல் நடக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவின் கொள்கைகள் எனக்கு தெரியும். அவர் என்னுடன் கல்லூரியில் படித்தவர். அவரை பற்றி நன்கு தெரியும். அரசியல் எதிர்காலம் குறித்து அவருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்திற்காக தனது கொள்கைகளை கைவிட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சென்றுள்ளார்.


latest tamil news



நான் தற்போது காங்கிரஸ் தலைவர் இல்லை. ராஜ்யசபா வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை. நாட்டின் பொருளாதாரம் குறித்து இளைஞர்களிடம் கூறியுள்ளேன். உண்மையில், பா.ஜ.,வில் சிந்தியாவுக்கு மரியாதை கிடைக்காது. அவருக்கு திருப்தி ஏற்படாது. அதனை அவர் புரிந்து கொள்வார். அவருடன் நீண்டகாலம் நண்பராக இருந்ததால், இது எனக்கு தெரியும். அவர் மனதில் உள்ளதற்கும், வாயில் இருந்த வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
13-மார்-202009:42:46 IST Report Abuse
Balaji இந்தாள நெனச்சா 'ஆத்தா வய்யும் காஷு குடு சந்தைக்கு போவோனும்' காரெக்டர் தாம்பா நாபாகத்துக்கு வருது...
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
13-மார்-202008:56:09 IST Report Abuse
Anandan காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சமயம் பொருளாதாரம் வீழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் அதை காங்கிரஸ் செய்ய தவறி விட்டது ஆனால் இப்போது கேள்வி கேட்கிறது. பிஜேபியின் வேலை பொருளாதாரத்தை கவனிப்பது அல்ல காங்கிரசை குறை சொல்வது மட்டுமே இதை ராகுல் எப்போது புரிந்து அரசியல் தெளிவு பெற்று அட போங்க.
Rate this:
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
13-மார்-202006:42:38 IST Report Abuse
kumaresan இந்திய பொருளாதாரம் என்பது ஒரு தனி நாட்டின் பொருளாதாரமானாலும் , அது அனைத்துலக பொருளாதாரத்துடன் இணைந்த பொருளாதாரமாகும் . அப்படி இருக்கையில், இதர நாடுகளுடைய பொருளாதாரம் உலகளாவிய நிலையில் சரியும் பொழுது , அதில் இணைந்து ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும் மற்ற நாட்டின் பொருளாதாரமும் சரிவடையும். இதுதான் அனைத்துலக சர்வதேச பொருளாதாரத்தின் தன்மையாகும் . இதனை நன்கு புரிந்தும், நாட்டு மக்களை குழப்புவதற்காகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள "பொருளாதார மேதை" என்ற நினைப்பில் இருக்கும் தலைவர்களும் , இந்த பப்புவும் நடந்து கொள்வது எந்த விதத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும்? எதை சொல்லியாவது மக்களை குழப்பி ஆட்சியை பிடித்தால் போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X