சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : மார் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டவுட் தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: குடியுரிமைத்திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் இனிமேல் போராட வேண்டாம்; போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என, கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதில், ஏப்ரலில் துவங்கும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்துங்கள்.

'டவுட்' தனபாலு: நம் நாட்டு முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என, அவர்களுக்கு பீதியை உண்டாக்கி, போராட்டங்கள் நடத்தச் செய்த நீங்கள், இப்போது, அவர்களுக்கு அடுத்த கேடு செய்யத் துணிந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்து ழைக்காவிட்டால், அவர்கள் பெயர் விடுபட்டு, பல சிக்கல்களை உருவாக்கி விடுமே... இதை பார்க்கும் போது, நீங்கள் அவர்களுக்கு பாதுகாவலரா அல்லது பாதகரா என்ற, 'டவுட்டும்' ஏற்படுகிறது!

நடிகர் ரஜினிகாந்த்: நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆட்சிக்கு ஒரு தலைமை; கட்சிக்கு ஒரு தலைமை. 'சிஸ்டம்' உண்மையில் கெட்டுப் போய் தான் விட்டது. அதை சரி செய்ய இது தான் சரி. நல்லவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், ஊழல் இல்லாத நேர்மையாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம். எனினும், அதை பலர் ஒத்துக் கொள்ளவில்லை.

'டவுட்' தனபாலு: இப்போ வருவார்; அப்போ வருவார் என கூறப்பட்ட, நடிகர் ரஜினி, அடுத்த ஆண்டு அரசியலில் தீவிரமாக இறங்க, இப்போதே செயல்திட்டத்தை அறிவித்து விட்டார். அவர் சொல்வது போல, அடுத்த சட்டசபை தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டால், இப்போதைய, தி.மு.க., - கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் கதி அதோகதிதானோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி: மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக, தமிழகத்தில் உப்பு உற்பத்தி, மூன்று ஆண்டுகளாக, கடுமையாக வீழ்ந்துள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், குஜராத் மாநிலத்தில் வழங்கப்படும் சலுகைகள், தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.

'டவுட்' தனபாலு: தினமும், ஏதாவது அறிக்கை வெளியிட்டு, பத்திரிகைகளில் அது வெளிவந்தால் தான், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இன்னும் மாற்றப்படவில்லை என்பது, உங்கள் கட்சியினருக்கு தெரியும் என்பதால் தான், உப்பு பெறாத விவகாரங்களுக்கும் அறிக்கை அளிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், இன்று, உப்பு சத்யாகிரஹ நாள் என்பதை, காலண்டரில் பார்த்து விட்டு, உப்பு பற்றி அறிக்கை அளிப்போமே... என, அறிக்கை வெளியிட்டுள்ளீர்களோ!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
13-மார்-202012:25:41 IST Report Abuse
Suppan இந்த வருங்கால ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு அப்பொழுது சொல்கிறார் "CAA வால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. ஆக இத்தனை நாட்கள் அவர்களைத் தவறாகத்தானே வழி நடத்தினீர்கள். வெட்கமாக இல்லை. நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்கத் தைரியம் உள்ளதா உங்கள் கூட்டாளிக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து? இப்பொழுது NPR உங்கள் கையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு 12 கோடி கையெழுத்துக்கள் வாங்க ஆரம்பியுங்கள்> போய்க் கையெழுத்துக்கள்தானே. உங்கள் கட்சிக்காரர்கள் அதில் கைதேர்ந்தவர்கள்.
Rate this:
Cancel
13-மார்-202010:45:26 IST Report Abuse
Thangavel Vel சொடலை.. கிடைக்கிற ரேஷன் அரிசிக்கும், சக்கரைக்கும் வெடி வெக்கிறாப்பல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X