சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொரோனா'வை அறியாத கொக்கிரகுளம் அதிகாரிகள்!

Added : மார் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கொரோனா'வை அறியாத கொக்கிரகுளம் அதிகாரிகள்!

அப்போ, இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் மிகப் பெரிய ராஜதந்திரிகள் என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேட்டி: ராஜ்யசபா எம்.பி., இடத்திற்கு, த.மா.கா., தலைவர் வாசனை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அறிவித்துள்ளனர். அதன் பின்னணியில், அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது.

வட்ட அறிவியல் மையத்தில், ஏராளமான மாணவ - மாணவியர் குவிந்திருந்தனர்; பொதுமக்களும் ஏராளமாக வந்திருந்தனர்; அறிவியல் மையத்தின், கருவிகள், அறிவியல் தத்துவங்களை விளக்கும் காட்சிப் பொருட்களை, தொட்டும், பேசியும், பார்த்தும் அறிந்தனர்.

அதற்கான காட்சிப் பொருட்கள், கருவிகள், சுத்தப்படுத்தப்படாமல், அழுக்கேறி காணப்பட்டன. அதுபற்றி விபரம் அறியாத அந்த பிஞ்சுகள், வாய் வைத்தும், கண்களில் சொருகியும், கையால் தொட்டும், கருவிகளின் செயல்பாடுகளை அறிந்தனர். அங்கு வந்திருந்த பொதுமக்களில் சிலர், 'உலகம் முழுக்க, கொரோனா பீதி பத்திட்டு எரியுது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் வந்து செல்லும் இந்த வளாகத்தில் உள்ள கருவிகளை, நிர்வாகிகள், சுத்தப்படுத்தாமலேயே வச்சிருக்காங்களே...' என, பீதியடைந்தனர். அதைச் சொல்ல, பொறுப்பாளர்களைத் தேடியபோது, யாரும் அங்கு இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-மார்-202006:20:22 IST Report Abuse
D.Ambujavalli சாதனங்களை வைத்துவிட்டு, நம் கடன் முடிந்தது என்று கிளம்பியிருப்பார்கள். இத்தகையவர்களால் கொரானா என்ன இன்னும் நூறு வைரஸ், கிருமிகள் கிளம்பும். யாரோ பெற்ற பிள்ளைகள்தானே என்ற அலட்சியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X