அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதிலால் சபையில் சிரிப்பலை

Added : மார் 12, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
 முதல்வர் பதிலால் சபையில் சிரிப்பலை

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகனுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பதிலால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டசபையில், நேற்று, 'கொரோனா வைரஸ்' தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளித்தார். அப்போது, ''மக்கள் பயப்படவோ, பதற்றமடையவோ, பீதியடையவோ தேவையில்லை; வதந்தியை நம்பாதீர்கள்; சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தியை மட்டும் நம்புங்கள்,'' என்றார்.அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: 'பயப்படாதீர்கள் ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை' என்கிறீர்கள். பீதியை நாங்களா ஏற்படுத்தினோம். நீங்கள் தான் ஏற்படுத்தினீர்கள். போன் செய்தால் இருமுகின்றனர். யார் தும்மினாலும் பயமாக உள்ளது. எல்லா நடவடிக்கையும் எடுத்து விட்டதாக கூறுகிறீர்கள். இங்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்... லோக்சபாவில் பார்வையாளர்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு வழக்கம்போல் வருகின்றனர். முதல்வர்: இந்த நோய் எப்படி பரவும் என்பதை, அமைச்சர் தெளிவுப்படுத்தி உள்ளார். நோய் பாதிக்கப்பட்டவர் தும்மினால் தான், நோய் பரவும்.இங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை. எனவே, தும்மினாலும் பிரச்னை இல்லை. நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை; 70 வயதுக்கு மேலானோர் பாதிக்க வாய்ப்பு என்று கூறியதால், அச்சப்படுகிறீர்களோ என்னவோ தெரியவில்லை. நம் மருத்துவர்கள் சிறப்பானவர்கள்.

எனவே, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும், அதற்கும் தகுந்த சிகிச்சை அளிக்க, நம் டாக்டர்கள் தயாராக உள்ளனர்.வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தான், இந்நோய் உள்ளது; உள்நாட்டில் யாருக்கும் இல்லை. வெளிநாட்டில் இருந்து வருவோரை, பரிசோதனை செய்து, அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக சிகிச்சை அளிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, முதல்வர் கூறியதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-மார்-202022:27:07 IST Report Abuse
madhavan rajan அரசு அச்சப்படத்தேவையில்லை என்றுதான் கூறவேண்டும். உடல் நலம் சரியில்லாதவரை பார்த்து திமுக தலைவர்கள் நீ தேறமாட்டாய் இறந்துவிடுவாய் என்று கூறுவார்கள் போல. இவர்கள் உண்மையே கூறுபவர்களாக இருந்தால் மூலப்பத்திரத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லலாமே. இவர்களுக்கு இவர்கள் அலுவலகம் இடம் சொந்தமில்லை என்பதே தெரியாது. இவர்களெல்லாம் அரசை குறை கூறுகிறார்கள். கேவலம்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
14-மார்-202021:12:23 IST Report Abuse
S.Ganesan சரியான பதில்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மார்-202019:51:52 IST Report Abuse
Lion Drsekar நமக்கு செய்தி ஆள்துளைக் கிணற்றை உறிஞ்சினார் ஆனால் குளிர்சாதன அறையில் மக்களின் வரிப்பணத்தில் மகிழ்ச்சியாக சிரித்து... இதுதான் ஜனநாயகம், நமக்கு டென்சன் அவர்களுக்கு என்றைக்குமே ஆனந்தம், வந்தே மாதரம்
Rate this:
Hari - chennai,இந்தியா
14-மார்-202009:38:23 IST Report Abuse
Hariஎன்ன செய்ய துரைமுருகன் நேரம் அப்படி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X