அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி தரத்தை அறியவே 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல்வர் விளக்கம்

Updated : மார் 14, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
TamilNadu,CM,EPS,EdappadiPalanisamy,பொதுத்தேர்வு,முதல்வர்,விளக்கம்,பழனிசாமி,இபிஎஸ்

சென்னை: ''மாணவர்களின் கல்வி தரத்தை அறிந்து கொள்வதற்காகவே, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தமுடிவு செய்தோம்,'' என,முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.


சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:

தி.மு.க., - பொன்முடி: மத்திய அரசு கூறியதை ஏற்று, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு அறிவித்தீர்கள். தி.மு.க., தலைவர், ஸ்டாலின் எதிர்த்து, அறிக்கை வெளியிட்டதும், தேர்வை ரத்து செய்தீர்கள்.

முதல்வர்: ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தினால் தான், மாணவர்களின் கல்வித் தரத்தை, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் அறிந்து கொள்ள முடியும். தேர்வு எழுதாமல், அவர்களின் தரத்தை அறிய முடியாது. எனவே, தேர்வை அறிவித்தோம். பின், அனைவருடைய கோரிக்கையை ஏற்று ரத்து செய்தோம்.

பொன்முடி: தேர்வு அவசியம் என்றால், ஏன் ரத்து செய்தீர்கள்?

முதல்வர்: நீங்கள் பொய்யை திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்தீர்கள். எங்களை எதிரி போல காட்ட முயற்சித்ததால், ரத்து செய்தோம். நேரடியாக மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போது, பதற்றத்திற்கு உள்ளாவர். அதை தவிர்க்க ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வில், மாணவர்களின் கல்வி தரத்தை அறிந்து, அவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வை, நன்றாக எழுத உதவ முடியும்.

பொன்முடி: எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வான, இ.எஸ்.எல்.சி.,யில், ஏராளமானோர் தேர்ச்சி பெற முடியாமல், படிப்பை விட்டனர். அதன் காரணமாகவே, இ.எஸ்.எல்.சி., தேர்வு ரத்து செய்யப்பட்டது.

முதல்வர்: அன்றைய நிலை வேறு; இன்று நிலை வேறு. மாணவர்கள், அறிவுப்பூர்வமான கல்வி பெற, இலவசமாக, 'லேப்டாப்' வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு உலகத்தரமான கல்வியை வழங்க வேண்டும்.

பொன்முடி: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

முதல்வர்: கிராமப்புற மாணவர்களின் நலன் கருதியே, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்தோம். நகர்ப்புற மாணவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு வசதி இல்லை. அவர்கள் தரத்தை அறிந்து, தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கவே, தேர்வு நடத்த முடிவு செய்தோம்.

பொன்முடி: தேர்வு நடத்த வேண்டாம் என்று, கூறவில்லை; பொதுத் தேர்வு வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

முதல்வர்: அதைத் தான் அமைச்சர் கூறினார். பொதுத்தேர்வு நடத்தப்படும்; யாரும் தோல்வி அடைய மாட்டார்கள் என்று. நீங்கள் தான் தவறான கருத்தை பரப்பினீர்கள். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-202021:24:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அஞ்சாப்பு பாஸ் பண்ணா எம்.எல்.ஏ.. எட்டாப்பு பாஸ் பண்ணா மின்ஸ்டர், மொதலமைச்சருக்கு பத்தாப்பு பாஸ் பண்ணனும். வெக்கலாமா? ரெடியா தற்குறிகளே? வெந்நீருக்கு ஒம்பதாப்பு சரியா வரும்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மார்-202019:49:49 IST Report Abuse
Lion Drsekar தற்போதைய கல்வி தரத்தை அறியவேண்டும் என்றால் மாணவர்களின் எந்த தேர்வாக இருந்தாலும் அவர்கள் எழுதிய விடைத்தாள்களை மறுஆய்வு செய்தாலே எல்லாமே தெரியவரும், செய்வீர்களா ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-மார்-202015:45:01 IST Report Abuse
ஆரூர் ரங் கட்டுமர ஆட்சியில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலக சீனியரிட்டிபடி ஆசிரியர்களை நியமித்துவிட்டார்கள் பலர் முப்பத்தாண்டுகளுக்கு முன் பழைய பாடத்திட்ட SSLC படித்தவர்கள் அவர்கள் லட்சணத்தைக் கேட்கவேண்டாம். அதனாலதான் அவர்களது மாணவர்களுக்கு தேர்வு வேண்டாமென சொல்வதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X