கமல்நாத் பலத்தை நிரூபிக்க ம.பி., - பா.ஜ., வலியுறுத்தல்

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத்தின் காங்., அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, கவர்னர், லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர், என்.பி. பிரஜாபதி ஆகியோரை சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இன்று தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி, 22 எம்.எல்.ஏ.,க்களுக்கும், சபாநாயகர் பிரஜாபதி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.மத்திய பிரதேசத்தில், முதல்வர்
kamalnath,congress,madhyapradesh,bjp,scindia,கமல்நாத்,காங்கிரஸ்,பாஜ,மத்தியபிரதேசம்,சிந்தியா

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத்தின் காங்., அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, கவர்னர், லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர், என்.பி. பிரஜாபதி ஆகியோரை சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இன்று தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி, 22 எம்.எல்.ஏ.,க்களுக்கும், சபாநாயகர் பிரஜாபதி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அவருடைய ஆதரவாளர்களான, 22 காங்., - எம்.எல்.ஏ.,க்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை, கவர்னர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சட்டசபையில், காங்., பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. இந்நிலையில், சட்டசபையில், வரும், 16ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என, பா.ஜ., கூறியுள்ளது. இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் கட்சியின் கொறடா நரோத்தம் மிஸ்ரா, கூறியுள்ளதாவது: சட்டசபையின் மொத்தமுள்ள, 228 இடங்களில், காங்.,குக்கு, 114 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். பெரும்பான்மைக்கு, 115 பேரின் ஆதரவு தேவை. பகுஜன் சமாஜ், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வந்தனர்.

தற்போது, 22 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால், சட்டசபையின் பலம், 206 ஆக குறைகிறது. பெரும்பான்மைக்கு, 104 பேரின் ஆதரவு தேவை. ஆனால், காங்.,குக்கு, 92 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பா.ஜ.,வுக்கு, 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது, காங்., அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. வரும், 16ம் தேதி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.

அன்றைய தினம், கமல்நாத் அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக, கவர்னர் மற்றும் சபாநாயகரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதற்கிடையே, இன்று தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி, 22 எம்.எல்.ஏ.,க்களுக்கும், சபாநாயகர் பிரஜாபதி, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.


சிந்தியா சந்திப்பு:

பா.ஜ.,வில் இணைந்த, ஜோதிராதித்ய சிந்தியா, ராஜ்யசபாவுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் கட்சியில் இணைந்த சிந்தியா, கட்சியின் பல முக்கிய தலைவர்களை நேற்று சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை அவர் சந்தித்தார். 'சிந்தியாவின் வருகையால், மத்திய பிரதேசத்தில் மக்களுக்கு சேவையாற்ற பா.ஜ.,வுக்கு பலம் அதிகரித்துள்ளது' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமித் ஷா கூறியுள்ளார்.


சிவசேனா நம்பிக்கை:

மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. சிவசேனாவின், 'சாம்னா' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், 'மத்திய பிரதேசத்தில் நடந்ததுபோல், மஹாராஷ்டிராவிலும் அதிர்ச்சி நடவடிக்கைகள் நடக்கும் என, பா.ஜ.,வினர் பகல் கனவு காண வேண்டாம். 'இந்தக் கூட்டணி அரசு மிகவும் வலுவாக, இணக்கமாக உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.


போபாலில் வரவேற்பு:

பா.ஜ.,வில் இணைந்துள்ள, ஜோதிராதித்ய சிந்தியா, டில்லியில் இருந்து, தன் மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு நேற்று திரும்பினார். மத்திய விவசாயத் துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமருடன், சிறப்பு விமானத்தில், போபால் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் வந்தார். விமான நிலையத்தில் குழுமிஇருந்த, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.,வினர், அவரை வரவேற்றனர். அவருடைய அத்தையும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான யசோதரா ராஜே சிந்தியா, பா.ஜ., மூத்த தலைவர்கள் அவரை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து, பா.ஜ., அலுவலகத்துக்கு செல்லும், 15 கி.மீ., துார சாலைகளில், பா.ஜ., கொடிகள், சிந்தியாவின் படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, மாநிலத்தில் சில இடங்களில், சிந்தியாவின் போஸ்டர்களுக்கு, சிலர் கறுப்பு வர்ணம் பூசியதாக கூறப்படுகிறது. ராஜ்யசபாவுக்கு வரும், 26ம் தேதி நடைபெறும் தேர்தலில், மத்திய பிரதேசத்தில், பா.ஜ., வேட்பாளராக, சிந்தியா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று, தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.


மரியாதை கிடைக்காது!

சிந்தியா சொல்வதற்கும், அவருடைய மனதில் உள்ளதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தன் கொள்கையை அவர் மறந்துவிட்டார். அதனால், பா.ஜ.,வில் அவருக்கு சரியான மரியாதை கிடைக்காது.
- ராகுல், எம்.பி., காங்கிரஸ்

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
13-மார்-202021:24:34 IST Report Abuse
Balasubramanian முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தாங்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் 49 முறை மெஜாரிட்டி நிறைந்த மாநில ஆட்சிகளை, எம்ஜிஆர், என்டிஆர் ஆட்சி உட்பட கவிழ்த்த காங்கிரஸுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இனியும் இவர்கள் 'காந்தி' களையும் ஏனைய கிழங்கட்டைகளையும் நம்பி இருந்தால் அதோ கதிதான்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
13-மார்-202010:06:17 IST Report Abuse
sahayadhas இவனுங்களுக்கு இதே வேலை , கர்நாடகம் தொடங்கி இங்க வரை . Next எங்கயோ,
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-மார்-202003:59:30 IST Report Abuse
blocked user இராஜ பரம்பரை என்ற திமிர் இந்த ஆளுக்கு எப்பொழுதும் உண்டு. அதை ஓரங்கட்டி வைத்தால் நல்லது.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-மார்-202011:36:55 IST Report Abuse
Darmavanஒன்றுமில்லாத கமல் நாத்துக்கு கர்வம் இருக்கும்போது ராஜ பரம்பரைக்கு இருக்க கூடாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X