சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள, 'யெஸ் பேங்க்'கில், ஹிமாச்சல பிரதேச அரசு, அரசு நிறுவனங்கள், மாநிலத்தில் வசிக்கும் மக்கள் ஆகியோரின், 1,919 கோடி ரூபாய் டிபாசிட் சிக்கியுள்ளது. மாநிலத்தில், யெஸ் பேங்கின் ஒன்பது கிளைகளில், இந்த பணம் முடங்கியுள்ளது.
ஜெய் ராம் தாக்குர், ஹிமாச்சல் முதல்வர், பா.ஜ.,
பெண்களுக்கு இளஞ்சிவப்பு பஸ்
ஒரு கோடிப் பேர் வசிக்கும் நகரங்களில், பெண் ஓட்டுனர், நடத்துனருடன், இளஞ்சிவப்பு நிற பஸ்களை இயக்கலாம். சில மாநிலங்களில் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. புதிதாக தயாரிக்கும் அரசு பஸ்களில், எச்சரிக்கை பொத்தான், கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது
.நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து அமைச்சர், பா.ஜ.,
கடவுள் துணை புரியட்டும்
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் ஓரம் கட்டப்பட்டார் என கூறப்படுவதில் உண்மையில்லை. அவர் அசைவின்றி, குவாலியர், சம்பல் பகுதியில் எதுவும் நடந்ததில்லை. அவர், மோடி, அமித் ஷாவிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவர், பா.ஜ.,வில் பாதுகாப்பாக இருக்க, கடவுள் துணை புரியட்டும்
திக்விஜய் சிங், மூத்த தலைவர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE