'நிர்பயா' குற்றவாளியின் தந்தை புதிய வழக்கு

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
nirbhayacase,nirbhaya,hang,delhigangrape,நிர்பயா,தூக்கு,பலாத்காரம்

புதுடில்லி : மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளியின் தந்தை, டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.

நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிறைவேற்ற மூன்று முறை, நாள் குறிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும், 20ம் தேதி இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதற்கிடையே, தூக்கு தண்டனை கைதிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் தந்தை, டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.'இந்த வழக்கின், ஒரே சாட்சியான, நிர்பயாவின் நண்பர், பணம் வாங்கி, பேட்டி அளித்தது தொடர்பாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு' அவர், ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இதை, விசாரணை நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து, அவர், தற்போது, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, 'மண்டோலி சிறையில் இருந்தபோது, என்னை தாக்கிய இரண்டு போலீசார் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ' என, டில்லி நீதிமன்றத்தில், பவன் குமார் குப்தா சர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., 8க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-மார்-202011:47:47 IST Report Abuse
Dr. Suriya பேசாம இவனுவோலை நிரபராதின்னு வெளிய விட்டுடுங்க கணம் நீதிபதிகளே.. மக்கள் நாங்கள் பார்த்து கொள்(கொல்) கிறோம்..... மக்களே இனியும் நீதி சட்டம் என்று இந்த விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டாம்....
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
13-மார்-202023:13:51 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த நீதிமான்களும் வழக்குரைஞர்களும் மத்தியில் காங்கிரஸ் அரசாண்ட காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் அதனால் தான் இந்த வழக்கு ஊசலாடுகிறது
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-மார்-202016:48:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவ்ளோவருசம் இழுத்ததுபோறாதா என்னய்யா இதேமாதிரி உன் மகளுக்கோ அக்கா தங்கைக்கோ நேர்ந்திருந்தால் பாவம்னு வுட்டுருவியா உன் மனைவிக்கும் பாடிப்பாகஇருந்தால் புதுமாப்பிள்ளை ஆயிருப்பியா இவ்ளோஆண்டுகள் எதார்க்குஇந்த வெறிநாய்களை வூட்டுவச்சானுக விடுதலை ஆயிட்டு வெளியேவந்தா உன் மனைவி அக்காத்ங்கை எல்லோருக்கும் நன்மை செய்வான் என்றா வெட்கமாயில்லையா பிராத்தல் நடத்தும் கூட்டம்களையும் அவாளுக்குபெண்களை விற்கும் நாய்களையும் நடுத்தெருவில் வச்சு சுட்டுத்தள்ளவேண்டும் ப்ராத்தல்களை நாடிப்போயிட்டு எய்ட்ஸ் பரப்பாளிகளையும் கொல்லவேண்டும் ரெட் லைட்டு பகுதி என்ருபீத்தபெருமைவென்ற நாசமாப்போக வெட்கமேயில்லாத வெறிநாய்க்கூட்டங்கள் , இந்தப்பெயர் அரசியலிலே இருக்கு சினிமாலே இருக்குங்க பலவீடுகளிலேயும் மாமனார் ரூப்மலே அலையும் நாய்கள் இருக்கானுக எல்லோரும் தூக்கிலேபோடவேண்டிய நாய்களேதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X