அரசியல் செய்தி

தமிழ்நாடு

பால் தாக்கரே பாணியில் ரஜினி அரசியல்

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
பால் தாக்கரே பாணி,ரஜினி அரசியல்

கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற திட்டத்தை, நடிகர் ரஜினி அறிவித்திருப்பது, பால் தாக்கரே பாணி அரசியல் என, அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி நிறுவனர், பால் தாக்கரே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற, கொள்கையை கடைபிடித்தார்.


latest tamil news


மஹாராஷ்டிரா முதல்வராக, மனோகர் ஜோஷி, நாராயண் ரானே போன்றவர்களை, பால் தாக்கரே உருவாக்கினார். எனவே, அவரது பாணியில், முதல்வரை உருவாக்கும், 'கிங் மேக்கர்' போல் இருக்க, ரஜினி விரும்புகிறார் என, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.


ஸ்டாலினை குறிவைக்கும் ரஜினி!



ரஜினி கூறுகையில், ''நாம், இரண்டு பெரும் அரசியல் ஜாம்பவான்களை எதிர்கொள்ள போகிறோம். இது, சாதாரண விஷயமல்ல. பத்து ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லை என்றாலும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், ஒரு தரப்பும்; ஆட்சியில் இருந்தபடியே, குபேரனின் கஜானாவையே கையில் வைத்து கொண்டு, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில், மற்றொரு தரப்பும் காத்திருக்கின்றன,'' என்றார். ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும், அவர் போட்டியாளர்களாக கருதுவது, இதில் இருந்து தெரிய வருகிறது.


ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது;



'டுவிட்டர்' பக்கத்தில், நடிகர், எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: 'முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது; அது எனக்கு, 'செட்' ஆகாது' என, ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி, அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை. கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்த ராஜதந்திரமும் தேவை.எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது; இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி இருவர் கையில் இருந்தால், முதலில் கட்சி, சின்னம் முடங்கும்; இதுவே வரலாறு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
13-மார்-202018:27:07 IST Report Abuse
K.Sugavanam இந்த போட்டோ ஒரு சினிமா ரிலீசுக்காக நம்ப எலி அந்த புலி கால்ல விழுந்தபோது எடுக்கப்பட்டது போல இருக்கே..
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-மார்-202018:25:40 IST Report Abuse
K.Sugavanam பாத்து..எதுக்கும் ஒரு அளவு வேணும்..இந்த தலைப்பை உத்தவ் தாக்கரே பார்த்தால் ரஜினி பாடு கந்தல் ஆயிடப்போகுது..புலியோடு எலியை ஒப்புநோக்கிக்கிட்டு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
13-மார்-202018:08:14 IST Report Abuse
Girija "அதான் கெனரே வெட்டலியே, அப்புறம் என்னத்த பார்வை இடர்ர்ர்ரது ? ", "புரட்சி செய்தால் அசுரபலம் கொண்ட கட்சிகள் தொண்டர்களை காலில் போட்டு மிதிக்காதா? அதுக்குஅப்புறம் நீங்க என்ன வர்ர்ர்ர்ர்ரறது? " எதுக்கு எங்க எல்லாம் வீங்கி இருக்குனு பாக்குறதுக்கா? "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்" இவ்வளவு பயம் உள்ளவர் பாரளுமன்றத் தேர்தலில் பிஜேபிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருந்தால் ஒரு அசுரனை வதம் பண்ணியிருக்க முடியும். சிவாஜியைவிட மோசமான அரசியல் அறிவை கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X