சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மஞ்சளும், நேனோ தொழில்நுட்பமும்!

Added : மார் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மஞ்சளும், நேனோ தொழில்நுட்பமும்!

மஞ்சளின் மருத்துவ குணம் பற்றி சொல்லவேண்டியதில்லை. மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள்தான் பல நோய்களை வராமல் தடுக்கவும், நோய்களை குணமாக்கவும் உதவுகிறது.

ஆனால், உணவாக உட்கொள்ளப்படும்போது, குர்குமினை நம் உடல் எடுத்துக்கொள்ளும் அளவு மிகக் குறைவு தான்.இதை எப்படி அதிகப்படுத்துவது என, தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அமெரிக்கா, கனடா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் நடந்த இந்த ஆய்வில், குர்குமின் செறிந்த நேனோ துகள்களை உட்கொள்ளும்போது, வழக்கமான உணவு வடிவில் செலுத்தப்படுவதைவிட, 117 சதவீத அளவிற்கு குர்கு மினை, மனித உடல்எடுத்துக்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

விலங்குகள் மீது செய்த இந்த ஆய்வின் முடிவைப் போலவே, மனித உடலும் அதிக அளவில் குர்குமினை எடுத்துக்கொள்ளுமானால், இதய நோய்கள், புற்று நோய்கள் மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என, விஞ்ஞானிகள் கருது கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-மார்-202020:16:05 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மனித உடலும் அதிக அளவில் குர்குமினை எடுத்துக்கொள்ளுமானால், இதய நோய்கள், புற்று நோய்கள் மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என, விஞ்ஞானிகள் கருது கின்றனர். //// வணிக ரீதியாகவே எதையும் அணுகக் கூடாது ...... இறைவன் பேராசையுடையோரை என்றும் தண்டிப்பான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X