கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 70 ஆயிரம் பேர்

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
நியூயார்க்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 70 ஆயிரம் பேர் குணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் ஹூபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. அந்நாட்டில் பல உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ், மெல்ல மற்ற நாடுகளுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும்,
CoronaVirus, COVID19, Recovery, RecoveryCases, Statistics, China, Italy, India, கொரோனா, வைரஸ், கோவிட்19, குணம், சீனா, இறப்பு, டிஸ்சார்ஜ், இத்தாலி, இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 70 ஆயிரம் பேர் குணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. அந்நாட்டில் பல உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ், மெல்ல மற்ற நாடுகளுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. உலக நாடுகளின் தொடர் நடவடிக்கையால் தற்போது நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிபடியாக குறைந்து வருகிறது.


latest tamil newsகொரோனா வைரஸ் குறித்த புள்ளிவிவரங்களில் இதுவரை உலக நாடுகளில் மொத்தம் 1,34,769 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு 70,387 பேர் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். 4,983 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, கொரோனா பாதித்தவர்களில் 52 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குணமடைந்ததாகவும், 3.6 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த தொற்றுநோய் பாதிப்பால் 59,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5,994 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


latest tamil newsஅதிகபட்சமாக சீனாவில் 80,814 பேர் பாதிக்கப்பட்டு அதில் 64,117 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். இத்தாலியில் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேரில் 12,839 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் இதுவரை 75 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு 4 பேர் குணமாகியுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 70 பேரில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news
மீண்டது எப்படி


இதற்கிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமெரிக்க பெண் எலிசபெத் ஸ்னைடர், 37, என்பவர் அதிலிருந்து மீள்வது குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது:
ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டது. ஆனாலும், பிஸியாக வேலைக்கு சென்றுவந்தேன். காய்ச்சலுடன் உடல் வலி, தலைவலியும் உணர்ந்தேன். காய்ச்சல் 103 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. அந்தநேரத்தில் எனக்கு அதிகமாக நடுங்க ஆரம்பித்தன.

ஆனால் இருமல், மூச்சு திணறல் இல்லாததால் எனக்கு கொரோனா வைரஸ் இல்லை என நினைத்திருந்தேன். அடுத்த சில நாட்களுக்கு பிறகு, என் நண்பரின் பேஸ்புக் பதிவில் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கு இதே அறிகுறி இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனால், காய்ச்சல் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஏனெனில் எனக்கு அதன் தாக்கம் தெரியவில்லை. ஆனால் என் அம்மா அழுதார்.


latest tamil newsகுறைந்தது 7 நாட்களும், நோய் அறிகுறி தணிந்ததும் 72 மணி நேரம் வீட்டில் தனியாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். தற்போது முழுவதும் குணமானாலும், பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறேன். இதனால், நோய் தொற்று பற்றி எந்த பீதியும் அடைய வேண்டாம். அறிகுறி தென்பட்டாலேயே உயிருக்கு ஆபத்து அல்ல. வீட்டிலேயே இருந்து, அதற்கான மருந்துகள் உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிங்கள், நிறைய ஓய்வெடுங்கள். நீங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சிகளை அதிகளவு பாருங்கள். பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tadj.C - Paris,பிரான்ஸ்
13-மார்-202015:54:26 IST Report Abuse
tadj.C தற்போதைய நிலவரப்படி இந்த தொற்றுநோய் பாதிப்பால் 59,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5,994 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். கணக்கு எங்கயோ இடிக்குதே
Rate this:
Cancel
PRAKASH RS -  ( Posted via: Dinamalar Android App )
13-மார்-202015:54:08 IST Report Abuse
PRAKASH RS N THE CHINA IS VERY DANGEROUS AND VIGROUSLY SPREADING....THIS PEOPLE HAVE TRUTH IN THEIR LIFE THEY ARE ALL AMONG US LIAR...GOVERNMENT SAY LIKE THIS ASKING WHAT THEY ARE ALL SAYING...GOVERNMENT SAY YES PEOPLE SAY YES...IF TELL NOYES TOOTH ARE BROKEN...LEGS BROKEN AMONG THE AFFECT AREAS CLOSED AND SEAL
Rate this:
Cancel
13-மார்-202012:48:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உடலில் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், சிகரெட் பழக்கம், ஆஸ்மா இல்லாதவர்கள் மீண்டு வரலாம். மற்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நலம். இது சில மாதங்களுக்கு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X