விண்கல் மூலமாக வந்த வைரஸ் தான் கொரோனா: விண் உயிரியல் மைய பேராசிரியர் சர்ச்சை கருத்து

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

லண்டன்: 'சீனா மீது விழுந்த விண்கல்லே கொரோனா வைரஸ் உருவாகக் காரணம்' என, விண் உயிரியல் மைய பேராசிரியர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



பக்கிங்ஹாம் விண் உயிரியல் மைய பேராசிரியர் சந்திர விக்ரமசிங்கே தெரிவித்திருப்பதாவது:கடந்த அக்., 11ம் தேதி, சீனாவில் வடக்கு அட்சரேகைப் பகுதியில், வூஹான் அருகே, விண்கல் விழுந்தது. அதன் மூலமே கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது.கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருப்பது, சீனாவிலிருந்து, 40 முதல் 60 டிகிரி வடக்கு அட்சரேகைப் பகுதியில் தான். இதிலிருந்தே விண்கல்லின் பாதிப்பை அறிய முடிகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



விக்ரமசிங்கேவின் இந்த கருத்தை பலரும் மறுத்து வருகின்றனர். குறிப்பாக, நோய்த்தொற்று வல்லுனர்கள், விக்ரமசிங்கேவின் கூற்றை முற்றிலும் மறுத்துள்ளதோடு, 'கோவிட்19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ், ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களைப் போன்றது தான். அது, வன விலங்குகளிடம் இருந்தே தோன்றியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




ஆனால், சீனா மீது விண்கல் விழுந்ததற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள, விண் உயிரியல் மைய பேராசிரியர் விக்ரமசிங்கே, 'விண்கல் விழுந்த பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தால் தனது கூற்று உண்மை என்பதை அனைவரும் உணருவர்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
15-மார்-202015:06:45 IST Report Abuse
Nallavan Nallavan சீனாவுக்கு முட்டுக் குடுக்க அவன் அப்படிச் சொல்றான் ..... தலைப்புல சர்ச்சைக் கருத்து -ன்னு சேர்க்கலை -ன்னா நாம இவனை நம்ம கருத்துல கூறு போடுவோமா ???? சொல்லுங்க பார்ப்போம் .....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-மார்-202006:07:51 IST Report Abuse
 nicolethomson பிதற்றல் மன்னனோ
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-மார்-202006:07:26 IST Report Abuse
 nicolethomson பிதற்றல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X