சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என, நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள்; எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. ரஜினி நல்ல நடிகர். ஆனால், அவர் எம்.ஜி.ஆர்., அல்ல. ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது; பலிக்காது. எனினும், அவரது வருகைக்கு, நாங்கள் தடையாக இல்லை.

'டவுட்' தனபாலு: 'ரஜினி கட்சி துவக்குவார்; சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்; தமிழக கட்சிகளை ஆட்டம் காண வைப்பார்' என சொல்லி, உண்மையை நீங்கள் ஒப்புக் கொண்டால், அடுத்த நொடியே, கூட்டணியிலிருந்து, தி.மு.க., உங்கள் கட்சியை வெளியேற்றி விடும். அதனால் தான், ரஜினி இவ்வளவு சொன்ன பிறகும், அவர் கட்சி துவக்க மாட்டார் என்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: தமிழில் பெயர் பலகை எழுதாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற பழைய அணுகுமுறை நீடித்தால், அனைத்து பெயர் பலகைகளிலும், தமிழ் மணக்கும் என்பது கனவாகிவிடும்.

'டவுட்' தனபாலு: இப்படித் தான், 'இளைஞர்கள் மதுபானம் அருந்தக் கூடாது; 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும்' என, பேசி பேசி, இளைஞர்கள் ஓட்டுகள், உங்கள் கட்சிக்கு விழாமல், 30 ஆண்டுகளாக கனவு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது, வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பேசி, அவர்கள் ஓட்டுகளையும் இழந்து விடுவீர்களோ என்ற, 'டவுட்' கிளம்புகிறது!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கொரோனா நோய் குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., துரைமுருகன் அச்சப்பட வேண்டியதில்லை. 70 வயதுக்கு மேலானோர் பாதிக்க வாய்ப்பு என்று கூறியதால், அச்சப்படுகிறாரோ என்னவோ தெரியவில்லை. நம் மருத்துவர்கள் சிறப்பானவர்கள். எனவே, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும், அதற்கும் தகுந்த சிகிச்சை அளிக்க, நம் டாக்டர்கள் தயாராக உள்ளனர்.

'டவுட்' தனபாலு: துரைமுருகனுக்கு, 81 வயதானதால், அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறீர்கள். ஆனால், 3 மாத குழந்தை, 15 வயது சிறுவனுக்கும், பல நாடுகளில், கொரோனா பாதிப்பு உள்ளதே... எனவே, இனிமேலும் சுகாதார விஷயத்தில் அலட்சியமாக இருக்க மாட்டீர்கள்; வலுவான நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்பதில், 'டவுட்' இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மார்-202006:21:51 IST Report Abuse
D.Ambujavalli இதுவரை பதிவான கொரானா இறப்புகள் எல்லாமே 70 80 வயதுக்கு மேலானவர்கள் தானா முதல்வரே உங்கள் கட்சியில் எல்லோருமே 20 வயதினரா? ஒரு தொற்று என்றால் எல்லோருக்கும் பயம் வருவது சகஜமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X