சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இஸ்லாமியரில் திறமை உள்ளோர் ஏராளம்!

Added : மார் 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இஸ்லாமியரில் திறமை உள்ளோர் ஏராளம்!

கே.ஜெ. ஜஹாங்கீர், நகரி, ஆந்திரா மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., பொதுச் செயலராக ஓர் இஸ்லாமியரை நியமிக்க வேண்டும் என்று, ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து, வாசகர் ஒருவர், இப்பகுதியில் கடிதம் எழுதியிருந்தார். அப்படி ஓர் இஸ்லாமியர் திறமை இல்லாத பட்சத்தில், ஒரு தலித்தை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.

இஸ்லாமியர்களில், திறமை உள்ளவர் ஏராளம். அதில் கருணாநிதியால் பாராட்டை பெற்றவர், ரகுமான் கான்; சிறந்த பேச்சாளர்; துரைமுருகனுக்கு சமமானவர். இன்னொருவர், வேலுார், முகமது சகி; சிறந்த பேச்சாளர். எம்.பி.,யாக இருந்தவர்; மாவட்டச் செயலர் பதவி வகித்தவர்.இவர்களில் ஒருவரை பொதுச் செயலராக நியமித்தால், சிறப்பாக செயல்படுவர். ஆனால், ஸ்டாலினுக்கு மனம் வர வேண்டும்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 38 இடங்களில் வென்ற, தி.மு.க., சார்பில், ஒரு எம்.பி., கூட, முஸ்லிம் இல்லை. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர், இ.பி.எஸ்., எவ்வளவோ பரவாயில்லை! இஸ்லாமியர் முகமது ஜானை, ராஜ்யசபா, எம்.பி.,யாகத் தேர்ந்து எடுத்தார். அவருக்கு சலாம்!


குட்டு வெளியாகி விடும் என, பயமா திராவிடக் கட்சிகளே?


தி.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தமிழக திருக்கோவில்கள் சென்றால், சாமி சிலைகளின், நம் பண்டைய, விலை மதிக்க முடியாத, தங்க வைர வைடூரிய ஆபரணங்கள் பாதுகாக்கப்படும். பல திருக்கோவில் நிலங்கள், அரசியல்வாதிகளால் விற்கப்பட்டு, பொறியியல் கல்லுாரிகள் ஆகிவிட்டன.

துாத்துக்குடி மாவட்டத்தில், அறம்வளர்த்த நாயகி சமேத ஏகாந்த லிங்க ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. வைணவ தலத்தில், தாமிரபரணி வட கரையில், பல சித்தர்கள் தவமிருந்த, வரலாற்று பின்னணி கொண்ட சிவன் கோவில் இது.சில ஆண்டுகளுக்கு முன், பிரதோஷ கால மூர்த்தியை, இக்கோவிலில் யாரோ களவாடினர். போலீசார், ஆற்றின் புதுப் பாலம் அருகே சென்றபோது, சாக்குப் பையுடன் சென்று கொண்டிருந்த நபர், ஓட ஆரம்பித்தார்; போலீசார் அவரைப் பிடித்து, பையைத் திறந்து பார்த்தால், அதில், பிரதோஷ கால மூர்த்தி!

அந்த சிலையை போலீசார், ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், திருடன் அகப்பட்ட இரண்டு தினங்களில், அதே கோவில் தொழிலாளி, 'கோவில் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பிரதோஷ கால சிலை கிடைத்தது' எனக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்ததாக செய்தி வந்தது! மேலும் அந்தச் சிலை தற்போது, ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சிலைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையா இது?

அதேபோல், ஆதிநாதர் ஆழ்வார் கோவில் நுழைவு வாயில் அருகே, ௫.௫ அடி உயரத்திற்கு, கைகூப்பிய நிலையில், ஆஞ்சநேயர் கற்சிலை ஒன்று இருந்தது. அதை, பல ஆண்டாகக் காணவில்லை. கல் மண்டபக் கற்கள் என்னானது? அங்கிருந்த கல் நாதஸ்வரம் சிதிலம் அடைந்ததாகக் கூறப்படுகிறது; ஆனால், அதையும் காணோம்! முன்னாள் தலைமை செயலர், ஞான தேசிகன் முன்னோர் வழி வாழ்ந்த பழைய கிராம முன்சீப், தேசிக மூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதி இருந்த இடத்தில் இப்போது, திடீரென முருகன் கோவில் தோன்றியது எப்படி?

முனைஞ்சிப்பட்டி, பேய்குளம் பகுதியில், கோவிலுக்கு பாத்தியப்பட்ட, ௧௦௦ ஏக்கர் நிலம், திருமயாபுரம் கிராமத்தில், கிறிஸ்துவ ஆலயம் கட்ட விற்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையா? திராவிட ஆட்சியில், வெளிப்படையாக பேசினால் அடி; புகார் ழுதினால் வெட்டு... உயிரை விட, யார் முன்வருவர்! தென் திருப்பேரை கோவிலில் நகைகள் திருடப்பட்டன. எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்த போது, அப்போதைய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த நடேசன் பால்ராஜ், மீண்டும் நகை செய்ய ஆணையிட்டார்; இன்று வரை பலனில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில், கோவில்கள் வந்தால், எல்லா குட்டும் வெளியாகி விடும் என்பதால், தமிழக கட்சியினர் இப்போதே கூப்பாடு போடத் தொடங்கி விட்டனர். ஈஸ்வரோ ரக்ஷது!


ஓங்கட்டும் நம் கலாசாரம்!


ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப் பிய, 'இ- -மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரசால், உலகமே பீதியால் உறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியர்களாய், குறிப்பாக, தென் மாநிலத்தவராக, நாம் பலவிதத்தில் பெருமைபட்டுக் கொள்ளலாம். கரங்கள் குலுக்குவதால் கொரோனா வைரஸ் நோய் பரவுவதாக வந்த மருத்துவ தகவலையடுத்து, பெரும்பாலான மக்கள், பரஸ்பர வரவேற்பை உணர்த்த, பாதத்தோடு பாதமாய் முட்டிக் கொள்வதை, சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இதை நினைத்து, அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.

நம் பண்பாடு என்ன... இரு கரம் கூப்பி, வணக்கம் தெரிவிப்பது. இனி... வாழை இலையின் துாய்மையை, அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, மற்ற நாட்டினர் பின்பற்றலாம். ராமாயண காலத்தில், ராமரும், அனுமனும், ஒரே இலையில் உணவருந்த, இரண்டாகப் பிரிக்கப்பட்ட கோடே, வாழை இலையின் நடுக்கோடானது எனக் கூறுவது உண்டு. அதே போல், அனுமன் பக்கம், காய்கறி, கூட்டு வகைகளும், ராமர் பக்கம் அவர் உணவான அரிசி வகையும் பரிமாறப்பட்ட பழக்கமும், இப்போது வரை பின்பற்றப்படுகிறது.

l 'ஊசி நுழையாத கிணற்றிலே, ஒருபடி தண்ணீர்' என, துாய்மையின் தன்மையை, விடுகதையாய் உணர்த்தி, இளநீரின் பெருமையில், அயல்நாட்டு குளிர்பானங்கள் ஓரம் கட்டப்படுவது, கொரோனா வைரஸ், உலகத்திற்கு உணர்த்திய உண்மையாகி நிற்கிறது. l கறுப்பர்கள் என கேவலமாய் சித்தரிக்கப்பட்ட நாமும், நாம் வாழும் வெப்பம் மிகுந்த சூழலுமே இனி, வாழத் தகுந்தவை என்பதை, இயற்கை உணர்த்தப் போகும் காலம் வெகு துாரத்தில் இல்லை. l 'கூழுக்கு நிகரான உணவில்லை; வேம்புக்கு நிகரான மருந்தில்லை' என்ற, அம்மை நோய்க்கான கிராம நாட்டு வைத்தியச்சியின், மாரியாத்தா மந்திரம் தான் இனி எடுபடும் போல!

உயிர்களை கொன்று சுவைக்கும் நிலை மாறி, இயற்கை தானியங்களை சாப்பிட வலியுறுத்துவதோடு, நிலவேம்பு கஷாயமே மிகச் சிறந்த, 'ஆன்டிபயாடிக்' என, உலக சுகாதார அமைப்பே ஓங்கி ஒலிக்கும் காலம் வரப் போகிறது. மொத்தத்தில், நம் முன்னோர் யாரும் மூடர்களல்ல என்பதை உணர்ந்து, நம் நாட்டு கலாசாரத்தை, உலகம் ஏற்கப் போகிறது, விரைவில்!


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
14-மார்-202022:28:13 IST Report Abuse
venkat Iyer திரு.பிரிட்டோ ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்.பெண்இள் அன்றைய காலத்தில் வீட்டு வாசலில் கிருமி நாசினியாக கருதும் பாணியை கறைத்து தெளிப்பதும் மற்றும் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து பூசி குளிப்பதும் வைரஸ் வராமல் தடுக்கும் முன்னைய முறைகளாகும்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
14-மார்-202011:11:33 IST Report Abuse
karutthu மன்னிக்கவும் பொது செயலாளர் பதவி ஏற்கனவே யாருக்கு என முடிவு செய்யப்பட்டு விட்டது அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மார்-202006:32:37 IST Report Abuse
D.Ambujavalli எங்கும் சுற்றி ரங்கனை அடை, என்பது போல் நம் பிள்ளைகளும் எல்லா அயல்நாட்டுக் கலாசாரத்தையும் சுற்றி வந்து, சுத்தம், ஆரோக்கியம் நம் நாட்டில்தான் நிலைகொண்டுள்ளதை அறிந்து திருந்தாத்தான் இந்தக் கொரோனா தொற்று பாடம் எடுக்கிறதோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X