பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 'கொரோனா'வுக்கு, 2வது பலி

Updated : மார் 14, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
India, corona, delhi, second, death, இந்தியா,டில்லி, இரண்டாவது பலி, கொரோனா, மூதாட்டி

புதுடில்லி : 'கொரோனா வைரஸ்' பாதிப்புக்கு, டில்லியை சேர்ந்த 68 வயது மூதாட்டி, நேற்றிரவு பலியானார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா', 116 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் பரவியதையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 81 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news


கர்நாடகா மாநிலத்தின் கல்புர்க்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர், சவுதியிலிருந்து சமீபத்தில் திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகனுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை மத்திய சுகாதாரத் துறையும், டில்லி அரசும் உறுதி செய்துள்ளது.இதன் மூலம், கொரோனா பாதிப்பால், இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NAGARAJAN NARAYANASAMY - Thanjavur,இந்தியா
14-மார்-202021:40:54 IST Report Abuse
NAGARAJAN NARAYANASAMY இன்னமும் அனைத்து மக்களிடம் ரூபாய் நோட்டு எண்ணும்போதும், பக்கங்களை திரும்பும்போதும் எச்சில் தொட்டு செய்வது உள்ளது. இந்த சமயத்திலாவது இந்த அருவெறுப்பான மற்றும் நோய் பரப்பும் பழக்கத்தை நிறுத்தினால் நல்லது. மேலும் கிரிக்கெட் விளையாட்டில் பந்தின் மீது எச்சில் தடவும் பழக்கத்தையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
பச்சையப்பன் ,கோபால் புரம். குரானா வைரஸை தடுக்க வக்கில்லாத மத்திய மாநில அரசுகள் உடணடியாக பதவி விலக வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்க்கு 50 லட்சம் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் குடுக்க வேண்டும்.
Rate this:
Naga Subramanian - Kolkatta,இந்தியா
14-மார்-202017:26:18 IST Report Abuse
Naga Subramanianதயாராக இருங்கள்....
Rate this:
Cancel
Jeevan (UK) -  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-202016:52:19 IST Report Abuse
Jeevan (UK) #கொரானா... இந்தப் பெயரைக் கேட்டவுடன் பயந்து நடுங்கிகிறோம் சிறிதாக சளி பிடித்தால் கூட கொரானாவாக இருக்குமோ என அஞ்சுகிறோம்...😔இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 80 பேர் தான்... அதில் மரணம் 1தான் இருந்தும் முன்னெச்சரிக்கையாக பல விஷயங்களை கையாளுகிறோம்..👈 தேடித்தேடி முகமூடியை😷 பன்மடங்கு விலை கொடுத்து வாங்குகிறோம்... உயிர் மேல் அவ்வளவு ஆசை அனைவருக்கும்..💥 இருக்கவேண்டியதுதான் 👍ஆனால் வேதனை என்னவெனில் கொரனாவை விட பல மடங்கு கொடிய விஷமான சாலை விபத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1000பேர்க்கு மேல் மரணிக்கின்றோம்பல ஆயிரக்கணக்கான பேர் விபத்துக்குள்ளாகி கை. கால் இழக்கின்றோம்....☹️☹️ அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் முடங்கிப் போகிறோம் 😞இருந்தும் சாலை விபத்து பற்றியோ அதில் ஏற்படும் மரணம் பற்றியோ நமக்கு எந்த அளவும் கவலையோ வருத்தமோ இல்லை😫 ஏன்????..... நம்மை காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை கூட நாம் செய்வதில்லை😡 ஏன்?????....கொரானாவால் போகும் உயிர் வலியில்லாமல் செல்லும்...😞ஆனால் சாலை விபத்தில் செல்லும் உயிர் மரண வலியோடு செல்லும்😭இருந்தும் அதன் மேல் பயம் இல்லை ஏன் ????...120 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு முதியவர் கொரானாவால் இறந்துவிட்டால் பெரும் அச்சத்தோடு பார்க்கிறோம்🧐 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இரத்தவெள்ளத்தில் வீழ்வதும்... மாழ்வதும் சர்வசாதாரணமாக நடக்க அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை ஏன்????...கொரானாவில் உயிர் சென்றால் தான் பலியா??? சாலையில் உயிர் செல்வது என்ன விதியா???ஒருவேளை நாம் சாலையில் செல்லும்பொழுது விபத்து ஏற்படுமாயின் எதிரே வருபவர் மீது அந்தப் பழியை சுமத்தி நான் ஒழுங்கா தான் வந்தேன் நீ தான் தவறாக வந்தாய் நீ தான் இந்த விபத்திற்கு காரணம் என்று பழியை எதிரே உள்ள ஆள் மேல் சுமத்துவம் இந்த கொரானா கூட நம்மால் ஏற்படுவதில்லை யாரோ ஒருவர் நமக்கு கொடுப்பதுதான் இருந்தும் அத்தனை முன்னெச்சரிக்கையோடு நாம் நம்மை காத்துக் கொள்ள முயல்கிறோம்.... இந்த விஷயத்தை ஏன் சாலையில் பயன்படுத்துவதில்லை????👉தயவு செய்து இதைப் படிக்கும் நல்லுள்ளங்கள் சாலையில் செல்லும் பொழுது #கவனமாக செல்லவும் பிற உயிரை தன் உயிராய் நினைத்து வாகனம் செலுத்தவும் இனியாவது சாலையில் வீழ்வதையும் சாலையில் மாழ்வதையும் தடுப்போம் ...சாலையில் மாழ நாம் என்ன புழுப் பூச்சியா??? #கெஞ்சிக் கேட்கிறேன் கொஞ்சம் யோசியுங்கள்🙏🙏👉இன்னுயிர் காப்போம்👉நல்லதைப் பகிர்வோம் (pls share it)👉நன்மையைப் பெருக்குவோம்என்றும்... என்றென்றும்... ஜீவன்..💪💪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X