புதுடில்லி: கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்பட்டதால் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.3 அதிகரிக்கிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.57 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.02 ஆகவும் விற்பனையாகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது.