வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்த நாட்கள் அற்புதமானவை; பிரதமர் மோடியுடன் இருந்த நேரத்தை மிகவும் விரும்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: இந்தியாவில் எங்களுக்கு சிறப்பான தருணம் கிடைத்தது. இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் அற்புதமானவை. பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இந்திய மக்களுக்கும், அவர் நண்பராக உள்ளார். அவருடன் இருந்தது எனக்கு பிடித்திருந்தது. குறிப்பிட்ட விஷயத்தை தாண்டி எல்லாவற்றையும் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிபர் டிரம்ப், மனைவி மெலினா, மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜரேட் குஷ்னர் ஆகியோருடன் கடந்த பிப்., 24 ல் இந்தியா வந்தார். இரண்டு நாட்கள் தங்கியிருந்த அவர், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தார்.
பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அப்பாச்சி மற்றும் எம்எச்- 60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.