என் கருத்தை கொண்டுபோய் சேர்த்ததற்கு நன்றி: ரஜினி

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (114) | |
Advertisement
சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து எனது கருத்தை கொண்டு சென்ற பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.அரசியலில் சில மாற்றங்களை விரும்புகிறேன், அதை செயல்படுத்த 3 திட்டங்கள் வைத்துள்ளேன் என ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன்பு அறிவித்தார். தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. பின்னால் இருந்து செயல்படுவது
Rajinikanth, Rajini, Rajinikanthpressmeet, ரஜினி, ரஜினிகாந்த்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து எனது கருத்தை கொண்டு சென்ற பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அரசியலில் சில மாற்றங்களை விரும்புகிறேன், அதை செயல்படுத்த 3 திட்டங்கள் வைத்துள்ளேன் என ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன்பு அறிவித்தார். தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. பின்னால் இருந்து செயல்படுவது மாதிரியான கருத்தையும் முன் வைத்தார். மக்கள் மத்தியில் புரட்சி வெடிக்க வேண்டும், மக்கள் மத்தியில் மாற்றம் நிகழ்ந்து எழுச்சி ஏற்பட்டால் அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறினார்.latest tamil newsஇதையடுத்து இருதினங்களாக மக்கள் மத்தியில் ரஜினி பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. பலர் ரஜினியை பேச்சை வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர். மீம்களும் துாள் கிளப்புகின்றன.

இந்நிலையில் ரஜினி டுவிட்டரில், ‛‛அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி''. என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-மார்-202013:21:24 IST Report Abuse
Malick Raja இது மக்களிடம் ஜோக்காக சென்று சேர்ந்துள்ளதும் ..இப்படியும் இவர் என்ற அளவில் என்றளவில் இருந்ததும் உண்மை .. இவரால் ஒன்றும் நடந்ததும் இல்லை ..நடப்பதும் இல்லை .. நடக்கப்போவதும் இல்லை என்பதையம் இவரது கருத்து மூலம் மக்களுக்கு தெளிவாக விளக்கியதும் உண்மையாக இருக்கிறது
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14-மார்-202023:18:10 IST Report Abuse
தாண்டவக்கோன் அதெ ஆளத்தெரியாத கூட்டத்தானுங்கள்ட்ட சொல்லி செஞ்ஜி காட்டவேண்டிதுதானெ ?
Rate this:
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
14-மார்-202022:13:47 IST Report Abuse
Pandianpillai Pandi ஒவ்வொருமுறையும் தாங்கள் ஒன்றை நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அரசியல் உங்களுக்கு சரிப்பட்டு வராது. பெரியாரின் கருத்தை நீங்கள் பிரதிபலிக்கீறீர்கள். அண்ணாவின் கருத்தை தாங்கி கொண்டு அவர் வழியில் இன்றளவும் அரசியல் மூலம் மட்டுமே மக்களுக்குக்கான உரிமைகளை பெற்று தர முடியும் என்பதில் எள்ளளவும் தொய்வின்றி நீதியின் வழியிலும் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றி தமிழர்களுக்காக திட்டங்களை செயல்படுத்தி அதில் வெற்றி கொடி பறக்கவிட்டது தி மு க தான். மக்களின் முன்னேற்ற பாதையில் தி மு க முன்னெடுத்து செல்லும் போது சில குறைகள் ஏற்படுகின்றன அவ்வாறான குறைகள் வளர்ச்சியின் தாக்கத்தால் வந்தவையே . உதாரணமாக தொழில் சாலைகள் தி மு க ஆட்சியில் அபரிதமாக வளர்ச்சியை கண்டன அதன் தாக்கம் மின்சார பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இருப்பினும் அதில் இருந்த ஓட்டையை கண்டுபிடித்து இரண்டுமணிநேர மின்வெட்டை அமல்படுத்தி எதிர்கால பின்சார தேவைக்கான அணைத்து வழிவகையையும் கண்டு தி மு க ஆட்சியில் இருக்கும்போதே செய்லபடுத்தியது. அம்மையாரின் சாதுரிய பேச்சினால் தி மு க வின் மீது வீண் பழி சுமத்தி அரியணை ஏறிய செயல்பட தெரியாத அம்மையார் மின்வெட்டை நாள் முழுவதும் ஆக்கினார். தி மு க செயல்படுத்திய திட்டங்கள் செயல்முறைக்கு வந்தபின்னரே மின்பற்றாக்குறை குறைய ஆரம்பித்தது என்பது வரலாறு. உங்களிடம் கேட்பது எல்லாம் ஒன்று தான் தமிழக மக்களை அரசியல் லாபத்திற்க்காக முட்டாலக்கதிர்கள். புரட்சி ஒன்றும் தேவையில்லை. மக்களை சிந்திக்க விட்டாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X