கொரோனா பீதி: அலுவலகத்தை காலி செய்தது இன்போசிஸ்

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
பெங்களூரு: இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம், தங்களது ஊழியர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்தது.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், கர்நாடக மாநில அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஐ.டி. மற்றும் பயோடெக் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை ஒரு வாரத்திற்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம், தங்களது ஊழியர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்தது.




latest tamil news

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், கர்நாடக மாநில அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஐ.டி. மற்றும் பயோடெக் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.



latest tamil news

உலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. பெங்களூருவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், இன்போசிஸ் பெங்களூரு மேம்பாட்டு மையத்தின் தலைவர் டேஷ்பாண்டே கூறியதாவது: இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், அந்த அலுவலகத்தை காலி செய்துள்ளோம். ஊழியர்களை பாதுக்காக்கும் நோக்கில் அவர்களை வீட்டிலிருந்து பணசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இதனால் ஊழியர்கள் அச்சம் அடைய வேண்டாம். வீண் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (15)

Ganapathy - Bangalore,இந்தியா
15-மார்-202011:52:16 IST Report Abuse
Ganapathy சார் ஏடிம் வழி பரவுவதை தடுக்க முடியவில்லை .
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
14-மார்-202021:49:36 IST Report Abuse
Subramanian Sundararaman கரோனா பரவாமல் தடுக்க currency பரிவர்த்தனையை தவிர்த்து POS machine அருகில் கார்டை கொண்டு போனாலே பணம் எடுக்குமாறு உள்ள fasilitiy ஐ அதிகப்படுத்த வேண்டும் .
Rate this:
vadivel - coimbatore,இந்தியா
20-மார்-202015:51:42 IST Report Abuse
vadivelஅருகில் கொண்டு போனாலே வசதியா போகும்....
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ இன்போசிஸ் மாபெரும் ஸ்தாபனம். ஒரு பணியாலருக்கு இந்த குரோனா வைரஸ் பரவி இருக்கும் என்ற ஐய்யத்தில் முன் எச்சரிக்கையாக உடனே நடவடிக்கை எடுத்தது பாராட்டுகுறிய செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X