வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம், தங்களது ஊழியர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், கர்நாடக மாநில அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஐ.டி. மற்றும் பயோடெக் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

உலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. பெங்களூருவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், இன்போசிஸ் பெங்களூரு மேம்பாட்டு மையத்தின் தலைவர் டேஷ்பாண்டே கூறியதாவது: இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், அந்த அலுவலகத்தை காலி செய்துள்ளோம். ஊழியர்களை பாதுக்காக்கும் நோக்கில் அவர்களை வீட்டிலிருந்து பணசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இதனால் ஊழியர்கள் அச்சம் அடைய வேண்டாம். வீண் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.