வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் ''வாத்தி '' ஸ்டெப் சேலஞ்ச் என்ற பெயரில் நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது போன்று உங்களின் வீடியோவை பார்க்க வேண்டும் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து, வாத்தி ஸ்டெப் சேலஞ்ச் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜயசேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ''மாஸ்டர்''. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (மார்ச் 15) நடைபெற உள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான '' ஒரு குட்டி ஸ்டோரி'' ரசிகர்களிடையே வரவேற்பை பெற, கடந்த 11ம் தேதியன்று''வாத்தி கம்மிங்'' என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இந்த பாடலுக்கு, இசையமைத்துள்ள அனிருத் ஒரு சிறிய நடனம் ஆடி, டுவிட்டரில் வெளியிட்டு, ரசிகர்களின் வீடியோவையும் பார்க்க ஆசைப்படுவதாக கருத்து பதிவிட்டார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை, ''வாத்தி கம்மிங்'' பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை டிக்டாக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மாஸ்டர் படத்தில் நடித்த ஷாந்தனுவும், அவரது மனைவியும் நடனக்குழுவுடன் இணைந்து ''வாத்திஸ்டெப்'' சவாலை ஏற்று நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியாக்களை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
