பொது செய்தி

இந்தியா

மொபைல் போன்களுக்கு ஜி.எஸ்.டி., உயர்வு: நிர்மலா சீதாராமன்

Updated : மார் 15, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: மொபைல் போன்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இன்று டில்லியில் விக்யான் பவனில் நடந்த 39வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நாட்டின் நிதி நிலையை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் விவாதிக்கப்பட்டது.கூட்டத்திற்கு

புதுடில்லி: மொபைல் போன்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.latest tamil newsஇன்று டில்லியில் விக்யான் பவனில் நடந்த 39வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நாட்டின் நிதி நிலையை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது;
' மொபைல் போன்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. செல்போனின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜி.எஸ்.டி.,யும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. கைகளால் மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.

ரூ 5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., ஆர்/19சி ஆவணம் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்படும். வருடாந்திர வருவாய் அறிக்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வதில் கால தாமத அபராதம் கிடையாது.


latest tamil newsவிமான பராமரிப்பு,பழுதுபார்ப்பு மீதான வரி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவில் எம்.ஆர்.ஓ சேவைகளை அமைக்க இது உதவக்கூடும்' இவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - tirunelveli,இந்தியா
15-மார்-202018:38:41 IST Report Abuse
sams Tax for govt employee dalary rise. first daysalary rise for 1 crore govt employees next day tax rise for 230 crore public
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-மார்-202016:28:35 IST Report Abuse
J.Isaac இனிமேல் பேசுவதற்கும் GST வரலாம். வரவேண்டும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-மார்-202013:26:27 IST Report Abuse
J.Isaac மனசாட்சியே கிடையாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X