தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை, தி,மு,க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் வெளியிட்டு, வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.



latest tamil news



இதில், அ.தி.மு.க., தரப்பில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா, 'சீட்' கொடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விஜய்காந்தின் தே.மு.தி.க., தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என, தொடர்ந்து கேட்ட போதும், வாசனுக்கு தரப்பட்டதற்கு, சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.


latest tamil news



வாசன் டில்லி அரசியலுக்கு வர வேண்டும் என, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்பினர். இந்த வேண்டுகோள், ஒரு முக்கிய தலைவர் மூலமாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வத்துக்கு தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



வாசனின் பெயர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி.முக., தலைவர்களுக்கு, பிரதமர் தரப்பிலிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது. விரைவில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், வாசன், ராஜ்யசபா, எம்.பி.,யாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-மார்-202018:07:59 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வாசன் அவர்கள் தமிழகத்தின் CM வேட்பாளர். தகுதியானவர். பிஜேபி அவரை பயன்படுத்திக்கொள்ளும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மார்-202017:37:11 IST Report Abuse
Malick Raja வாசனையற்ற வாசன் ..கதை முற்றுப்பெற்ற ஒன்று .. திருநாவுக்கரசர் தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தும் PJP.அவரை இழுத்து மந்திரி பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தாலும் தமிழகத்தில் தாமரை மொட்டாகவே இருந்தது அது மாதிரி ... ஓபிஎஸ் தலைமை முகவராக ஏன் பிஜேபியின் அங்கமாகவும் ... சிங்கமாகவும் இருக்கிறார் ஆனால் ஒட்டு மாட்டும் என்று நினைக்கவே கூடாது .. தமிழ்மண்ணில் தாமரை மலர வாய்ப்பு இருக்கவே இருக்காது
Rate this:
Cancel
sivan - seyyur,இந்தியா
16-மார்-202010:13:53 IST Report Abuse
sivan கிராமத்துல ஒரு சொலவடை உள்ளது குளத்து மேலே கோவிச்சுக்க கிட்டு ...கால் கழுவாமல் போனானாம் ஒரு பய' என்று ... அது மாதிரி மக்கள் யாரும் மோடி மேல கோவிச்சுக்க கிட்டு கை கழுவாமல் இருந்துறாதீங்க முக்கியமாக மிஸ்டர் ஓசி சோறு ... Avoid social contact enru Modi enna solrathu?/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X