காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

புதுடில்லி : காங்., தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,விற்கு தாவியது திடீரென நடந்த விஷயம் அல்ல. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கடந்த, மூன்று மாதங்களாக, திரை மறைவில் நடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



latest tamil news




ம.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், கட்சி தலைமையின் அனுமதி பெற்று, இதற்கான வேலைகளை, வெளியே தெரியாமல் செய்து வந்துள்ளார். முதல் கட்டமாக, அவர் சிந்தியாவை சந்தித்துப் பேசியுள்ளார். சிந்தியா, இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவிடம் பேச விரும்பியுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிந்தியா, நேரடியாக ஷாவின் வீட்டிற்கு செல்லாமல், ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தன் காரை நிறுத்திவிட்டு, அமித் ஷா அனுப்பிய காரில் ஏறி, அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு தான், ம.பி.,யில் உள்ள, காங்., ஆட்சியைக் கவிழ்க்கும் அனைத்து திட்டங்களும் தயார் ஆனது.


latest tamil news




ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், சிந்தியா. இருவரும், இரவு விருந்திற்கு ஒன்றாக, செல்வார்கள். தினமும், 'வாட்ஸ் ஆப்'பில், செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள். திடீரென, கடந்த, ஆறு மாதங்களாக, ராகுல், சிந்தியாவைக் கண்டு கொள்ளவேயில்லை. அதே நேரத்தில், ராகுல், ம.பி.முதல்வர், கமல்நாத்தை ஆதரிக்க தொடங்கினார். காரணம், பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கட்சிக்கு, கமல்நாத் எக்கச்சக்க நிதியைக் கொடுத்தார்.

இப்படி, சிந்தியாவை, காங்., தலைமை கண்டு கொள்ளாத நிலையில், 'எங்களிடம் வாருங்கள்... உங்களுக்கு, எம்.பி., பதவி தந்து, மத்திய அமைச்சராக்குகிறோம்; பதிலுக்கு கமல்நாத் ஆட்சியை கவிழுங்கள்' என, பா.ஜ., ஆசை காட்டியது. பா.ஜ.,வின் வலையில் விழுந்த சிந்தியா, தன் ஆதரவு, எம்.எல்.ஏக்களை வைத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பழிவாங்க தயாராகி விட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-202020:45:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கடந்த, மூன்று மாதங்களாக, திரை மறைவில் நடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.// இந்திய பொருளாதாரம் உச்சாணிக்கு வந்துடுமில்லே.
Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
20-மார்-202013:54:47 IST Report Abuse
G.Krishnanமஹராஷ்ட்ராவில் காங்கிரஸ் பண்ணால் தப்பில்லை . . . . . .பி ஜே பி பண்ணின தப்பு . . . . .எந்த ஊரு நியாயம் இது...
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
14-மார்-202023:52:04 IST Report Abuse
அப்பாவி ஏன்டா காங்கிரசுக்கு மட்டுமா வேட்டு வைக்கிறிங்க இந்திய மக்களுக்கும் இதை தொடர்ச்சியாக சிறப்பாக செய்யறீங்க
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14-மார்-202023:33:21 IST Report Abuse
தாண்டவக்கோன் ஆளத்தெரியாதவனுங்க 6 வருசத்துல பெட்ரோலு -டீசலுல மட்டும் ஆறு லெச்செங்கோடி ரூவாய்க்கி மேல கொள்ள, Rafael விஞ்ஞான ஊழல், plus இன்னபிற ஒப்பந்தம்/deals, இப்டி செம்மயா கொள்ளயடிச்சி வெச்சிருக்கானுங்க. அந்த பணம்லாந்தான் இப்பெ state வாரியா வெள்ளாடுது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15-மார்-202009:35:19 IST Report Abuse
 Muruga Velராணுவ பென்ஷன் .. ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் .. ரெயில்வேயில் தொழிலாளர்கள் சம்பளம் வாங்குபவர்களை விட பென்சன் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அளவுக்கு மீறி சம்பளம் .. ஆண்டு தோறும் இன்கிரிமெண்ட் மற்றும் அகவிலைப்படி உயர்வு ... விவசாயிகளுக்கு உர சலுகை ..இலவச மின்சாரம் ..உர மானியம் ..பருவம் தவறி மழை பெய்தாலோ பெய்யாவிட்டாலோ நிவாரணம்...GST வருவாயில் குறைவு ..வருமான வரி செலுத்துவது குறைந்திருக்கிறது ..இந்த செலவுகளை சமாளிக்க பெட்ரோல் விலையை குறைப்பது எதிர் கால சந்ததியை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற உதவும்..தண்ட கேணனுக்கு எங்கேருந்து புரிய வைக்கிறது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X