காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,| Dinamalar

காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,

Updated : மார் 14, 2020 | Added : மார் 14, 2020 | கருத்துகள் (19)
Share

புதுடில்லி : காங்., தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,விற்கு தாவியது திடீரென நடந்த விஷயம் அல்ல. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கடந்த, மூன்று மாதங்களாக, திரை மறைவில் நடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



latest tamil news




ம.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், கட்சி தலைமையின் அனுமதி பெற்று, இதற்கான வேலைகளை, வெளியே தெரியாமல் செய்து வந்துள்ளார். முதல் கட்டமாக, அவர் சிந்தியாவை சந்தித்துப் பேசியுள்ளார். சிந்தியா, இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவிடம் பேச விரும்பியுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிந்தியா, நேரடியாக ஷாவின் வீட்டிற்கு செல்லாமல், ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தன் காரை நிறுத்திவிட்டு, அமித் ஷா அனுப்பிய காரில் ஏறி, அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு தான், ம.பி.,யில் உள்ள, காங்., ஆட்சியைக் கவிழ்க்கும் அனைத்து திட்டங்களும் தயார் ஆனது.


latest tamil news




ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், சிந்தியா. இருவரும், இரவு விருந்திற்கு ஒன்றாக, செல்வார்கள். தினமும், 'வாட்ஸ் ஆப்'பில், செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள். திடீரென, கடந்த, ஆறு மாதங்களாக, ராகுல், சிந்தியாவைக் கண்டு கொள்ளவேயில்லை. அதே நேரத்தில், ராகுல், ம.பி.முதல்வர், கமல்நாத்தை ஆதரிக்க தொடங்கினார். காரணம், பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கட்சிக்கு, கமல்நாத் எக்கச்சக்க நிதியைக் கொடுத்தார்.

இப்படி, சிந்தியாவை, காங்., தலைமை கண்டு கொள்ளாத நிலையில், 'எங்களிடம் வாருங்கள்... உங்களுக்கு, எம்.பி., பதவி தந்து, மத்திய அமைச்சராக்குகிறோம்; பதிலுக்கு கமல்நாத் ஆட்சியை கவிழுங்கள்' என, பா.ஜ., ஆசை காட்டியது. பா.ஜ.,வின் வலையில் விழுந்த சிந்தியா, தன் ஆதரவு, எம்.எல்.ஏக்களை வைத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பழிவாங்க தயாராகி விட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X