அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஜெ., சிலை அகற்றம்

Added : மார் 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 நாகர்கோவிலில் ஜெ., சிலை அகற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரியில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில், ஏற்கனவே, எம்.ஜி.ஆர்., சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், சிலை அருகே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட்டது.

நேற்று காலை, அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலர் அசோகன், சிலையை திறந்து வைத்தார். சிறிது நேரத்தில், அங்கு சென்ற வடசேரி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சிலை வைக்க அனுமதி பெறவில்லை என்பதால், அகற்றும்படி கூறினர்.

இதற்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாகர்கோவில் ஆர்.டி.ஓ., மயில் பேச்சு நடத்தினார்.இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களால் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, அ.தி.மு.க.,வினரிடம் கொடுக்கப்பட்டது. 'உரிய அனுமதி பெற்று, அதே இடத்தில் மீண்டும் சிலை வைப்போம்' என, அ.தி.மு.க., வினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
16-மார்-202014:29:25 IST Report Abuse
dandy கடுமரத்தின் சிலைகளை டாஸ்மாக் நாடெங்கும் இருந்து அகற்ற வேண்டும் ...COVID -19 கிருமியை விட இவன் சிலை பயங்கரமானது
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
16-மார்-202012:24:03 IST Report Abuse
chander ஏன் சிலை வைக்கிறதா அவசியம் உங்கள் கட்சி வளாகத்தில் வையுங்க யாருகேட்பா வருகிறவர்களுக்கு எல்லாம் சிலை வைத்தால் ரோடு எல்லாம் சிலையாகத்தான் இருக்கும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-மார்-202020:58:46 IST Report Abuse
RajanRajan திராவிட கூலிப்படை அட்டகாசம் தாங்க முடியல கொரான வைரஸ் சாமிகளா. நல்ல ஊடுருவி இடம் பார்த்து தாக்குங்க நாடு சுத்தமாவுற மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X