காங்கிரசின் எதிர்காலம் என்ன?

Updated : மார் 15, 2020 | Added : மார் 15, 2020
Share
Advertisement
delhiush, டில்லிஉஷ்காங்கிரஸ், காங், ஜெய்ராம் ரமேஷ், ஏ.கே.அந்தோணி, திக்விஜய்சிங்,  ஜோதிராதித்யா சிந்தியா, ம.பி., மத்தியபிரதேசம், தேர்தல்பிரசாரம், அதிமுக, அ.தி.மு.க., தமிழகம்,  அதிகாரிகள், பத்திரிகையாளர், தமிழகமுதல்வர், இபிஎஸ், முதல்வர்இபிஎஸ்,  எடப்பாடிபழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம், ஓபிஎஸ், ராஜ்யசபா தேர்தல், ராஜ்யசபா, ஜி.கே.வாசன், வாசன், பிரதமர்மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமித்ஷா, மோடி,  பாஜ, சிவராஜ்சிங்சவுகான், சவுகான், கமல்நாத்,

மத்தியப் பிரதேசத்தில், காங்., தலைவர், ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,விற்கு மாறியதை அடுத்து காங்கிரஸ் கலகலத்துப் போயிருக்கிறது. சீனியர் தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ் உட்பட, பல காங்கிரஸ் தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
'தென் மாநிலங்களில், காங்கிரசின் எதிர்காலம் இருண்டுவிட்டது.'வட மாநிலங்களில், காங்., வளர்ச்சி பெறாத நிலையில், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறார் முன்னாள் அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ்.ஜோதிராதித்ய சிந்தியா, 2019 லோக்சபா தேர்தலில் தோல்வியடைய, ம.பி., முன்னாள் முதல்வர், திக் விஜய் சிங் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை, சிந்தியா, கட்சி மேலிடத்தில் அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால், 'மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்கிறார், ஜெய்ராம் ரமேஷ்.'திக் விஜய் சிங்கிற்கு, ராஜ்ய சபா, 'சீட்'தரக் கூடாது என்பது சிந்தியாவின் விருப்பம்; ஆனால் காங்கிரசோ, திக் விஜய் சிங்கை, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவித்துவிட்டது' என சொல்லும் ஜெய்ராம் ரமேஷ், 'அடுத்த லோக்சபா தேர்தலிலாவது, காங் தேறுமா' என, நொந்து போய் கூறுகிறார்


தேர்தல் பிரசாரத்திற்கு அ.தி.மு.க., தயார்


அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில், மாநிலத்தை ஆளும், அ.தி.மு.க., இப்போதே இறங்கிவிட்டது. முதல் காரியமாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., ஒரு புத்தகத்தை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த, நான்கு ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசு செய்த சாதனைகள், குறிப்பாக, இ.பி.எஸ்., என்ன செய்தார் என்பது குறித்து, இந்தப் புத்தகம் விளக்க உள்ளது.பிரபல ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர் எழுதும், 50 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்திற்கு தேவையான புள்ளி விபரங்களைத் தர, 'சீனியர்' தமிழக அதிகாரிகள் சிலர் டில்லி வந்திருந்தனர். அந்த பத்திரிகையாளர் கேட்ட விவரங்களை கொடுத்ததோடு, அவர் கேட்ட சந்தேகங்களுக்கும், அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் தயாரானாலும், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளது. தங்கள் கட்சியின் முக்கிய பிரசாரமாக, இந்த புத்தகம் அமையும் என, அ.தி.மு.க., தலைவர்கள் கருதுகின்றனர். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட ஒரு காரணம் இருக்கிறதாம். இதை பிரதமர், நரேந்திர மோடி, டில்லியில் வைத்து வெளியிடுவார் என, சொல்லப்படுகிறது.


தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி


தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை, தி,மு,க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் வெளியிட்டு, வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. இதில், அ.தி.மு.க., தரப்பில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா, 'சீட்' கொடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விஜய்காந்தின் தே.மு.தி.க., தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என, தொடர்ந்து கேட்ட போதும், வாசனுக்கு தரப்பட்டதற்கு, சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. வாசன் டில்லி அரசியலுக்கு வர வேண்டும் என, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்பினர். இந்த வேண்டுகோள், ஒரு முக்கிய தலைவர் மூலமாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வத்துக்கு தெரிவிக்கப்பட்டது.வாசனின் பெயர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி.முக., தலைவர்களுக்கு, பிரதமர் தரப்பிலிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது. விரைவில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், வாசன், ராஜ்யசபா, எம்.பி.,யாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,


காங்., தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,விற்கு தாவியது திடீரென நடந்த விஷயம் அல்ல. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கடந்த, மூன்று மாதங்களாக, திரை மறைவில் நடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ம.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், கட்சி தலைமையின் அனுமதி பெற்று, இதற்கான வேலைகளை, வெளியே தெரியாமல் செய்து வந்துள்ளார். முதல் கட்டமாக, அவர் சிந்தியாவை சந்தித்துப் பேசியுள்ளார். சிந்தியா, இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவிடம் பேச விரும்பியுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிந்தியா, நேரடியாக ஷாவின் வீட்டிற்கு செல்லாமல், ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தன் காரை நிறுத்திவிட்டு, அமித் ஷா அனுப்பிய காரில் ஏறி, அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு தான், ம.பி.,யில் உள்ள, காங்., ஆட்சியைக் கவிழ்க்கும் அனைத்து திட்டங்களும் தயார் ஆனது.

ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், சிந்தியா. இருவரும், இரவு விருந்திற்கு ஒன்றாக, செல்வார்கள். தினமும், 'வாட்ஸ் ஆப்'பில், செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள்.திடீரென, கடந்த, ஆறு மாதங்களாக, ராகுல், சிந்தியாவைக் கண்டு கொள்ளவேயில்லை.அதே நேரத்தில், ராகுல், ம.பி.முதல்வர், கமல்நாத்தை ஆதரிக்க தொடங்கினார். காரணம், பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கட்சிக்கு, கமல்நாத் எக்கச்சக்க நிதியைக் கொடுத்தார்.
இப்படி, சிந்தியாவை, காங்., தலைமை கண்டு கொள்ளாத நிலையில், 'எங்களிடம் வாருங்கள்... உஙகளுக்கு, எம்.பி., பதவி தந்து, மத்திய அமைச்சராக்குகிறோம்; பதிலுக்கு கமல்நாத் ஆட்சியை கவிழுங்கள்' என, பா.ஜ., ஆசை காட்டியது. பா.ஜ.,வின் வலையில் விழுந்த சிந்தியா, தன் ஆதரவு, எம்.எல்.ஏக்களை வைத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து, பழி வாங்க தயாராகி விட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X