காங்.,ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,

Updated : மார் 15, 2020 | Added : மார் 15, 2020 | கருத்துகள் (103)
Share
Advertisement
காங்., ஆட்சி, பாஜ,வேட்டு

இந்த செய்தியை கேட்க

காங்., தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,விற்கு தாவியது திடீரென நடந்த விஷயம் அல்ல. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கடந்த, மூன்று மாதங்களாக, திரை மறைவில் நடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ம.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், கட்சி தலைமையின் அனுமதி பெற்று, இதற்கான வேலைகளை, வெளியே தெரியாமல் செய்து வந்துள்ளார்.


latest tamil news


முதல் கட்டமாக, அவர் சிந்தியாவை சந்தித்துப் பேசியுள்ளார். சிந்தியா, இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவிடம் பேச விரும்பியுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிந்தியா, நேரடியாக ஷாவின் வீட்டிற்கு செல்லாமல், ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தன் காரை நிறுத்திவிட்டு, அமித் ஷா அனுப்பிய காரில் ஏறி, அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு தான், ம.பி.,யில் உள்ள, காங்., ஆட்சியைக் கவிழ்க்கும் அனைத்து திட்டங்களும் தயார் ஆனது.ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், சிந்தியா. இருவரும், இரவு விருந்திற்கு ஒன்றாக, செல்வார்கள். தினமும், 'வாட்ஸ் ஆப்'பில், செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள். திடீரென, கடந்த, ஆறு மாதங்களாக, ராகுல், சிந்தியாவைக் கண்டு கொள்ளவேயில்லை.

அதே நேரத்தில், ராகுல், ம.பி.முதல்வர், கமல்நாத்தை ஆதரிக்க தொடங்கினார். காரணம், பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கட்சிக்கு, கமல்நாத் எக்கச்சக்க நிதியைக் கொடுத்தார். இப்படி, சிந்தியாவை, காங்., தலைமை கண்டு கொள்ளாத நிலையில், 'எங்களிடம் வாருங்கள்... உஙகளுக்கு, எம்.பி., பதவி தந்து, மத்திய அமைச்சராக்குகிறோம்; பதிலுக்கு கமல்நாத் ஆட்சியை கவிழுங்கள்' என, பா.ஜ., ஆசை காட்டியது. பா.ஜ.,வின் வலையில் விழுந்த சிந்தியா, தன் ஆதரவு, எம்.எல்.ஏக்களை வைத்து, கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து, பழி வாங்க தயாராகி விட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
15-மார்-202021:14:59 IST Report Abuse
K.Sugavanam ரகசியமெல்லாம் அவங்க வாயாலேயே வெளீல வருது ..
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-மார்-202020:33:43 IST Report Abuse
r.sundaram இந்த செய்தியை, செய்தியில் இருக்கும் விதமாக பார்க்காமல் வேறுவிதமாகவும் பார்க்கலாமே: சிந்தியா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார், தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தார் அதனால். அனால் நேர்மையானவர் கட்சிக்கு வருமானம் வாராது என்பதால் அவர் ஓரம்கட்டப்பட்டு கமல்நாத் முதல்வராக்கப்பட்டார், காரணம் கட்சிக்கு நிதி கொடுக்க தயங்காதவர், அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கட்சி கவனிக்க வில்லை. ஊழலின் ஊற்றுக்கண் இதுதான். ராகுல் அவர்களின் நெருங்கிய நண்பர்தான் சிந்தியா. ஆனால் கடந்த எட்டு/பத்து மாதமாக சிந்தியாவினால் ராகுல் அவர்களை பார்க்க, பேச முடிய வில்லை. ஏன்? சிந்தியாவுக்கு முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்தவர் ராகுல். ஆனால் சோனியா தயவினால் கமல்நாத் முதல்வர் ஆகிவிட்டார். ஆதலால் ராகுல், சிந்தியாவை தவிர்த்தார். சிந்திய வேறு வழி இல்லாமல் பிஜேபி பக்கம் போகும் படி ஆயிற்று.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
15-மார்-202019:37:15 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு An eye er for all 😱😱 Mecca & Medina closed..... Vatican closed....…......... Tirupati & Shiridi closed...... The Man made Gods have closed their doors for humans ......................BUT God in form of humans are working 247 in modern temples known as hospitals இன்னும் சில மூடர்கள் மதம் மதம் என்று மதம் பிடித்து அலையுறார்கள் சங்கிகளே இன்னும் ஜாதி மதம் என்று ஏன் அலைகிறீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X