அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது பா.ஜ.,: முருகன்

Updated : மார் 15, 2020 | Added : மார் 15, 2020 | கருத்துகள் (145)
Share
Advertisement
பாஜ, முருகன், ஹிந்து, கோவை, பயங்கரவாதிகள், பாஜதலைவர்முருகன், murugan, bjpleadermurugan, hindu, kovai, terrorist,

இந்த செய்தியை கேட்க

கோவை: ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வது தான் பா.ஜ.,வின் கொள்கை என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைவராக பதவியேற்ற பின்னர் முருகன், முதல்முறையாக கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் முருகன் கூறியதாவது :

கோவையில் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யபிரகாஷ் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். கோவையில், இது போன்று தாக்குதல்கள் தொடர்வதாலும், அமைதி நிலவ வேண்டியும் போலீசார், தயவு தாட்சணியமின்றி உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும்.


latest tamil news



தமிழக பா.ஜ.,வினர் ஏற்கனவே சட்டசபையில் இடம்பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்க பாடுபடுவேன். எம்.பி.,க்கள் பதவி வகித்தும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணிக்கிறேன். தமிழக பா.ஜ.,வில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கூட்டுக்குழு எடுக்கும் முடிவு தான். நாங்கள் சிறப்பாக பணிபுரிகிறோம். அதில் தொய்வு இல்லை. எங்களின் பணியை இன்னும் வேகப்படுத்துவோம். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து செல்வது தான் பா.ஜ.,வின் கொள்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் பா.ஜ.,வை கொண்டு போய் சேர்ப்போம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
16-மார்-202014:15:00 IST Report Abuse
அப்பாவி என்னங்கடா கலர் கலரா விடறீங்க. அது சரி உண்மைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
16-மார்-202011:06:22 IST Report Abuse
Suppan மதுரை வைத்தியநாத ஐயர், சிதம்பரநாத முதலியார், ராஜாஜி போன்றவர்கள் தான் தலித்துக்களை ஆலய பிரவேசம் செய்ய வைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து வைத்தனர். கருணா ராமசாமி நாயக்கர் ஆகியோர் செய்தார்கள் என்று ஏன் கதை விடுகிறீர்கள். ராமசாமி நாயக்கர் தலித் பெண்களைப் பற்றி மட்டமாகப் பேசியது வரலாறு. இவர்கள் ரவிக்கை போட ஆரம்பித்ததனால்தான் துணி விலை ஏறிற்று என்றார். சரித்திரத்தை ஒழுங்காகப் படிக்கவும்.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-மார்-202023:50:41 IST Report Abuse
Babu உண்மை என்றால் மகிழ்ச்சியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X