சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ரொம்ப புகழ்கிறவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கணும்...'

Added : மார் 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ரொம்ப புகழ்கிறவர்களிடம்  மிகவும் கவனமாக இருக்கணும்...'

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி சார்பில் அமைக்கப்படும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு, சமீபத்தில் ஆய்வு செய்தார்.

பின், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'முதல்வர், இ.பி.எஸ்., சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்; விவசாயிகளின் நண்பன்; சாமானியர்களின் முதல்வர். அவர், சாதுர்யமாக, சாணக்கியமாக செயல்பட்டு, டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்... மாபெரும் தலைவராக அவர் விளங்குகிறார்...' என, பேசிக் கொண்டே சென்றார்.

இதை கேட்ட, மூத்த நிருபர் ஒருவர், 'ஆஹா... முதல்வரை, என்னம்மா புகழ்கிறாரு அமைச்சரு... இப்படி தான், சசிகலாவை, 'சின்னம்மா, தியாக தலைவி' என்றெல்லம் இந்த அமைச்சர்கள் புகழ்ந்து பேசினாங்க... எனவே, புகழ்ந்து பேசுறவங்க கிட்ட, முதல்வர், மிகவும் கவனமுடன் இருக்கணும்...' என கூற, அருகில் இருந்தவர்கள், 'நிச்சயமாக. உண்மை தான்...' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
16-மார்-202011:57:04 IST Report Abuse
karutthu என்ன தான் இருந்தாலும் ஈ பி எஸ் க்கு ஜெயலலிதா மாதிரி கறாரா இருக்கத் தெரியவில்லையே அவர்மாதிரி கெத்து காட்ட மாட்டேங்கிறாரே ஈ பி எஸ்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-மார்-202006:20:52 IST Report Abuse
D.Ambujavalli அப்பொழுது சின்னம்மாவால் பதவி கிடைக்கும் என்று புகழ்ந்தார் இப்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்காக முதல்வருக்குப் புகழாரம் வாழ்பவருக்குத்தான் எல்லாரும் மாரடிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X