சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: நடிகர் ரஜினிகாந்த், தன் அரசியல் கட்சி எப்படி இருக்கும்; கொள்கை என்ன என்பது குறித்து, இப்போது தான் விளக்கியுள்ளார். அவர் இன்னமும் கட்சி துவக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், மக்கள் நீதி மையம் கட்சி நடத்தி வரும் நடிகர் கமல், நடிகர் ரஜினியுடன் எவ்வாறு இணைவார்?

'டவுட்' தனபாலு: செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ரஜினி, தன் கட்சி பெயரை அறிவிப்பார்; முதல்வர் ஆவேன் என சூளுரை செய்வார் என, அலறிக் கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, இப்போதைக்கு அவர் அந்த விபரீத முயற்சியில் இறங்க மாட்டார் என்பது தெரிந்ததும், நிம்மதி ஏற்பட்டுள்ளது என்பது, உங்களைப் போன்ற தலைவர்களின், 'ரியாக் ஷனில்' டவுட் இல்லாமல் தெரிகிறதே!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: முதல்வராக நான் பொறுப்பேற்ற பின், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பொய் பிரசாரம் செய்கின்றனர். பூதக்கண்ணாடியை வைத்து அவர்கள் பார்த்தாலும், தமிழக அரசின் செயல்பாட்டில் எந்த குறையும் காண முடியாது.

'டவுட்' தனபாலு: நீங்கள் முதல்வராக ஆன பிறகு, எதிர்க்கட்சிகளின், எதிர்ப்பு வேகம் சற்று அதிகரித்துள்ளது என்பது, தமிழக மக்களுக்கே, 'டவுட்' இல்லாமல் விளங்குகிறது. ஜெ., முதல்வராக இருந்த போது, இப்போது காணப்படுவது போல, தெருவுக்கு தெரு எதிர்ப்பு, போராட்டங்களை எல்லாம் காண முடியாது. அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கி விடுவார். அந்த நுணக்கம், உங்களுக்கு இல்லையோ என்ற டவுட், சில நேரங்களில் வருகிறது!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: 'கருணாநிதிக்குப் பின், தம்பி ஸ்டாலின் தான், தி.மு.க.,வை தலைமை ஏற்று நடத்துவார்; அதற்கான தகுதி, அவருக்கு இருக்கிறது' என, முதன் முதலில் அறிவித்தவர், அன்பழகன் தான். இதை விட எனக்கு வேறு என்ன பெருமை கிடைத்து விட முடியும்?

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வில் கருணாநிதியின் கை ஓங்கியிருந்த நிலையில், இளைஞரணியில் நீங்கள் தலைவராக இருந்த காலத்தில், அன்பழகன் அவ்வாறு தான் அறிவித்திருக்க முடியும். அவ்வாறு அவர் கூறவில்லை என்றால், 'கட்டம்' கட்டப்பட்டிருப்பாரோ என்ற, 'டவுட்' இதனால் ஏற்படுகிறது. எப்படியோ அவர் காட்டிய வழியில் தான், நீங்களும், உங்கள் மகன் உதயநிதிக்கு, வழிகாட்டி வருகிறீர்கள்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-மார்-202006:17:53 IST Report Abuse
D.Ambujavalli இப்போது எல்லா வழிகளும் உங்களுக்காகவே திறந்துள்ளன. உதய நிதிக்கு ப்ரமோஷன் கொடுத்து பொருளாளர் ஆக்கி, மருமகனை பொருளாளர் ஆக்கி, மருமகளை மகளிர் அணித்தலைவி ஆக்கி, இன்னும் நிறைய ‘ஆக்கி’ களுக்குத்தான் குடும்பத்தில் வேண்டிய பேர் இருக்கிறார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X