கலால் வரியை உயர்த்திய மேதைகள்: ராகுல் விமர்சனம்

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய போது, மேதைகள் கலால் வரியை உயர்த்துகின்றனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சமீபகாலமாக சரிவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டாலும், விலை கடுமையாக
Congress, Rahul, PetrolPrice, Petrol, Diesel, Exciseduty, Genius, Twitter, காங்கிரஸ், ராகுல், பெட்ரோல், டீசல், விலை, கச்சா எண்ணெய், கலால் வரி, உயர்வு, மேதைகள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய போது, மேதைகள் கலால் வரியை உயர்த்துகின்றனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சமீபகாலமாக சரிவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டாலும், விலை கடுமையாக வீழ்ந்தாலும் ஓரளவே குறைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 என அதிரடியாக உயர்த்தியது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil news



இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள், என்ன செய்தார்கள் தெரியுமா, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-மார்-202020:29:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நீயும் பிரதமராக வரனும் என்று ஒரு மேதாவி நினைத்து கூக்குரலிட்டார், பப்பு வேகல நிதி விசாரணை கைதியாக உள்ளதை கவனம்கொள்ளாமல் நிரபராதி போல் மனசாட்சியை வித்துட்டுஉலாவுகிறார் பேசரார் என்றால் பாருங்களேன்......வெட்ககேடு...
Rate this:
Cancel
Thamilarasu K - Salem,இந்தியா
16-மார்-202018:20:57 IST Report Abuse
Thamilarasu K திரு ராகுல், நீங்கள் சொல்வதை போல் குறைக்கலாம், ஆனால் என்ன ஆகுமென்றால், பயன்பாடு அதிகரிக்கும், அந்நிய செலாவணி அதிகம் செலவாகும், பிறகு தீடீரென விலை அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையும் மட, மடவென உயர்த்த வேண்டி இருக்கும். பயன்பாடு அதிகமானால் சுற்று சூழல் பாதிப்பும் அதிகமாகும், மேலும் பற்றாக்குறையினால் இருக்கும் நம் நிதி நிலைமையை சமாளிக்க இது உதவும்...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
16-மார்-202018:12:56 IST Report Abuse
பாமரன் இங்கு அப்ரசண்டிங்க வழக்கம் போல தனிநபர் விமர்சனம் மட்டுமே செய்றாய்ங்க... சரி துக்ளக் படிக்கிறாங்க போல.... சிலதுங்க ரொம்ப மேதாவித்தனமா எழுதறதா நினைச்சு கண்ணாபின்னான்னு நம்பர்களை அடிச்சு விடுதுக... அதுகளுக்காக இந்த டேட்டா... பப்ளிக் ஃபாரமில் சரி பார்க்கவும். 2014லில் எண்ணை மாணியத்துக்காக ஆயில் பாண்ட் இருந்தது 145000 கோடிகள். அதைத்தவிர உணவுக்கு எண்ணெய் சிலவு ஒரு 25000 கோடிகள். இது தான் ஜீஜீ கையில் காங் குடுத்திருந்த கடன் தொகை. ஆனால் 2014 முதல் 2018 வரை எரிபொருள் வரி தில்லாலங்கடி மூலம் மட்டுமே அரசுக்கு உபரியாக வந்தது 575000 கோடிகள். சாலை கட்டுமான வேலைக்கு உபயோக படுத்தினதா பீலா விட முடியாது. ஏன்னா சாலை செஸ் என தனியா ஒரு லிட்டர் எரிபொருள் மீது ரூபாய் 8 வீதம் போன வருடம் வரை அடிச்ச அமவுன்ட் 250000 கோடிக்கும் மேல். போடும் எல்லா சாலையும் PPP மூலம் மட்டுமே... அதாவது செலவை தனியார் செய்ய அதில் வரும் வசூலில் பங்கு அரசுக்கு... இதெல்லாம் பார்லிமெண்ட்டில் ஒத்துக்கிட்ட விஷயங்கள். இதுவரை எந்தவொரு கடனையும் கரைச்சிட்டதா அரசு சொல்லலை... அதனால் பகோடாஸ்.... இப்போ கவர்ன்மென்ட் வண்டி ஓடுறதே இந்த கொள்ளைகள் மூலமாக தான். அந்த அளவுக்கு நிதி மேலாண்மை நிபுணத்துவம் உங்காளுகளுக்கு... அட இவிங்க திருடறது உங்க பணத்தையும் சேர்த்துதான்யா... உங்களுக்கும் மூளை இருக்கும்... யோசிங்கய்யா.... நிலைமை கை மீறி போயிடுத்து... அவ்ளோதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X