இத்தாலியில் ஒலித்த இளையராஜா பாடல்; பரவும் போலி வீடியோ

Updated : மார் 19, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
Italy, CoronaVirus, IlayarajaSong, InjiIduppazhagi, Tamil, Song, இத்தாலி, கொரோனா, வைரஸ், கோவிட்19, இளையராஜா, இஞ்சி இடுப்பழகி, தமிழ், பாடல்,

ரோம்: இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்கள் வீட்டின் பால்கனியில் இருந்தவாறு தமிழ் பாடலான 'இஞ்சி இடுப்பழகி' பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இது உண்மையான வீடியோவா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

உயிர்கொல்லி தொற்றுநோய் 'கொரோனா வைரஸ்' பாதிப்பால் உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 24,747 பேர் பாதிக்கப்பட்டு 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டின் முக்கிய நகரங்களை மூட, பிரதமர் கியூசெப் கான்டே உத்தரவிட்டார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.


latest tamil news



இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், பால்கனி பகுதியில் இருந்தபடி, ஒன்றாக பாட்டு பாடி மகிழ்ந்து வருகின்றனர். இத்தாலி தேசிய கீதம், இத்தாலிய மொழி பாடல்களை பாடி தங்கள் மனஅழுத்தத்தை போக்கி வரும் அந்த மக்கள், தமிழில் தேவர்மகன் படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான 'இஞ்சி இடுப்பழகி' பாடலை பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

மக்கள் அனைவரும் கோரஸாக பாடும் இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் இது போலியான வீடியோ என்றும், சிலர் இந்த வீடியோ தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டதால் இது உண்மையான வீடியோ என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Chennai,இந்தியா
19-மார்-202005:38:44 IST Report Abuse
Raja சர்ச் போக முடியாதல் வீட்டிலேயே பாடல் பாடிய வீடியோ வந்தது.. அதை எடிட் செய்து நம்ம மக்கள் செய்த வேலை இது..
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
17-மார்-202021:12:03 IST Report Abuse
S.Ganesan இத்தாலியில் வைரஸ் தொல்லை போதாது என்று வைரல் வேறா ? இது உண்மையான விடியோவாக தெரியவில்லை
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
17-மார்-202016:27:25 IST Report Abuse
Kumar இது நம்மூர் ஆட்கள் எடிட் பண்ணி வெளியிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X