புதுடில்லி: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. ஈரானில் இதுவரை, 13,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 724 உயிரிழந்துள்ளனர்.
![]()
|
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈரான், வைரஸ் பாதிப்பை சமாளிக்க முடியாமலும், மக்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமலும் திணறி வருகிறது. அதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது.
![]()
|
ஈரானில், 4,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஈரானிலிருந்து நான்கு கட்டமாக இதுவரை 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் லேப் வசதி இல்லாததை அறிந்த இந்திய அரசு, ஒரு லேப் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களை அனுப்ப முடிவு செய்தது.
![]()
|
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''ஈரானுக்கு அனைத்து நவீன வசதிகளும் கொண்ட லேப், இந்தியா சார்பாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அங்குள்ள இந்தியர்களை பரிசோதிக்க உள்ளோம். வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டும் அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியர்கள் மீட்கப்பட்ட பின், அந்த சோதனை லேப்பை ஈரானுக்கே வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது,'' என, தெரிவித்திருந்தார்.
![]()
|
இதையடுத்து, 15 டன் எடைகொண்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய அனைத்து வசதிகளும் கொண்ட லேப் உருவாக்கப்பட்டு, இந்திய விமானப்படையின் சி--17 குளோப்மாஸ்டர் III என்ற கனரக ராணுவ விமானம் மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.
![]()
|
கண்டனம் தெரிவித்த ஈரான்
'இந்தியாவில் முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டில்லி வன்முறையில் அதிகப்படியான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இனி, இவ்வாறான வன்முறை நிகழக்கூடாது' என, சி.ஏ.ஏ., விவகாரத்தில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீப், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இருந்தும் ஈரானுக்கு உதவும் நோக்கில், லேப்பை ஈரானுக்கே வழங்கவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்திருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE