சென்னைக்கு பக்கத்தில் விக்ரவாண்டி

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
latest tamil news


சென்னையில் வீடு வாங்க ஆசைப்பட்ட தன்னை சென்னைக்கு பக்கத்தில் என்று சொல்லி விழுப்புரம் பக்கத்தில் உள்ள விக்ரவாண்டி வரை அழைத்துச் சென்றதாக நகைச்சவை மன்றத்தில் ஒருவர் விவரிக்க உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.


latest tamil news


திநகர் நகைச்சுவை மன்ற மாதந்திர கூட்டம் மன்ற நிறுவனர் சேகர் தலைமையில் நடைபெற்றது.டி.வி.,சீரியல் நடிகர் கிரிதர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.91 வயது உடையார்பாளையம் சீனிவாசன் நகைச்சுவை துணுக்கு சொல்லி கூட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்ல ஆரம்பித்தனர்.
ஒரு அப்பா மகளிடம் பேசுகையில் மனுசனாப்பிறந்தால் சாதிக்கணும் என்று சொல்லிவிட்டு சாதனை செய்த சில பெண்களின் பெயர்களை அடுக்கினார்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மகள் அமைதியாக சொன்னாள் ‛எனக்கும் சாதிக்க பிடிக்கும்பா' என்றார்
உடனே அப்பா வெரிகுட் என்ன மாதிரி சாதிக்க பிடிக்கும் என்றார்
மகளோ கூலாக எனக்கு எதிர்வீட்டு ‛சாதிக்க' பிடிக்கும்பா என்றார்.
பாங்க் மேலாளரை பார்க்க இரண்டு விருந்தினர் வந்தனர்,தமிழ் தெரியாத மேலாளர் பியூனை கூப்பிட்டு ‛டூ டீ' என்று ஆர்டர் செய்தார். பியூனும் இரண்டு டீ கொண்டு வந்தார், அந்த நேரம் இன்னோரு விருந்தினர் வரவே மேலாளர் பியூனை கூப்பிட்டு ‛ஒன் மோர்' என்றார், பியூனோ ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் மோரை வாங்கிக்கொண்டு வந்துவைத்தார்.
இப்படி உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஜோக் சொல்லி மன்றத்தை தங்களது நகைச்சுவையால் குலுங்க குலுங்க சிரிக்கவைத்தனர் நிறைவாக அம்பத்துார் நாகேஷ் என்றழைக்கப்படும் நாராயணன் என்ற உறுப்பினர் வந்தார்.
அவர் சென்னை அருகே ஒரு வீடு வாங்க ஆசைப்பட்டாராம்.இதற்காக பத்திரிகைகளை புரட்டிய போது பதினாறு விதமான வசதிகளோடு கூடிய சென்னைக்கு பக்கத்தில் வீடு என்றிருந்த விளம்பரத்தை பார்த்து போன் செய்தாராம்.
குறிப்பிட்ட நாளில் இவர் உள்பட சிலரை அழைத்துக் கொண்டு சென்ற கார் செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் பக்கம் உள்ள விக்கிரவாண்டி வரை சென்றுவிட்டதாம்.
பிறகு ஒரு பொட்டல் வெளியில் நிறுத்தி நீங்க நிற்கிற இடத்திலதான் நீச்சல் குளம் வரப்போகுது,அதோ அங்கேதான் பள்ளிக்கூடம் கட்டப்போறோம் இதோ இங்கதான் உங்க வீடு வரப்போகுதுன்னு சொல்லிவிட்டு அட்வான்ஸ் கொடுங்கள் என்றனர்.
இருங்கப்பா என்று சொல்லி கொஞ்சம் தள்ளியிருந்த டீ கடையில் டீ குடிக்கப் போகும் போது என்ன சென்னையில் இருந்து வீடு வாங்க வந்தீங்களா இந்த இடமே இவுங்களுக்கு சொந்தமில்லை பார்த்துக்குங்க என்ற குண்டை துாக்கிப்போட்டாராம் டீ கடைக்காரர். நீயும் வேணாம் உன் வீடும் வேணாம்ணு சொல்லிவிட்டு வந்தேன் என்று விவரித்த போது மொத்த கூட்டமும் சிரித்து மகிழ்ந்தது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-மார்-202007:52:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni MERPADI KATTURAIPADICHCHADHUM UDANE NIYAABAGAM VARADHU INRUKAALAI NADANDHA JOKE ANVARBAAI ENBADHAI AISVARYAA RAAYNNUPADICHCHUTTU NAANE SIRICHCHUTTEN SAMEEBAMAA VALADHUKANNILE ORU SIRU PROBLEM ELUTHUKKAM MAARIYUM KALAINJUM THERIYUTHU ADHANAAL NERNTHA KODUMAI ITHU
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-மார்-202004:42:31 IST Report Abuse
 nicolethomson விக்கிரவாண்டி காரவுகளே நெசமா?
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-மார்-202013:28:49 IST Report Abuse
Lion Drsekarஇது ஒரு நகைசுவை மன்றம், எல்லோரும் சிரிப்பதற்காக நடத்தப்படும் ஒரு கூட்டம். நாட்டு நடப்பை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுதான் இந்த கலை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X