புதுடில்லி: கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார்.

இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
"யெஸ் வங்கியில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. தங்கள் முதலீடுகளைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மார்ச் 18 முதல் வழக்கம்போல வங்கி செயல்படும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மார்ச்18, மாலை 6 மணிக்குமேல் நீக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியும். நெருக்கடியிலிந்து வங்கி படிப்படியாக மீட்கப்படும். யெஸ் வங்கியின் புதிய நிர்வாக குழு, வருகின்ற 26ந்தேதி பொறுப்பு ஏற்கும். வாடிக்கையாளர்கள், வங்கியில் செலுத்திய பணத்தை இழந்ததாக வரலாறு இந்தியாவில் கிடையாது. ஆகையால் பதற்றம் காரணமாக பணத்தை மொத்தமாக எடுக்க வேண்டியதில்லை. யாரும் அச்சப்பட வேண்டாம்.

கொரோனா வைரஸ் பரவுவதால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வங்கிகள் செழிப்பாகவே இருக்கின்றன." இவ்வாறு அவர் தெரிவித்தார்.