பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச்-31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
march-31, schools, colleges, leave, மார்ச். 31, கல்வி நிறுவனங்கள், மூட உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் . தமிழகம் முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா' வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்; கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் நடந்தது. இதையடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தி் அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


10 மற்றும் 12 ஆம் தேர்வுகள் நடைபெறும்

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும். இத்தேர்வுகள் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக விடுதிகள் மற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.மேலும் அங்கன்வாடி மையங்கள்,அனைத்து திரையரங்குகள், வணிகவளாகங்கள், அருங்காட்சியங்கள், பூங்காங்கள், உடற்பயிற்சி மையங்கள், கேளிக்கை விடுதிகள், கிளப்புகள், பார்கள், டாஸ்மாக் பார்கள், ஆகியவை மூட வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் அனைத்து சமூக நிகழ்வுகளில் குறைந்தளவு மக்கள் கூடினால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். கோயில், தேவாலங்கள், மசூதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும். கொரோனா குறித்து பொய்யான தகவல் பரப்பினாலோ, வதந்தியை பரப்பினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் மார்ச்-31 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-202023:18:36 IST Report Abuse
nan டியூஷன் நடத்துகிறார்களா எனவும்கண்காணிக்கவும்
Rate this:
Cancel
Sankaranarayanan - Madurai,இந்தியா
16-மார்-202022:09:17 IST Report Abuse
Sankaranarayanan வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறதே. அப்பொழுது காரோண வைரஸ் வங்கிகளில் பரவதா? இதற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது?
Rate this:
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-202021:33:38 IST Report Abuse
SELF பள்ளிகளுக்கு 31ம் தேதி வரை மட்டும் ஏன்? அதன் பிறகு எல்லாம் சரியாகி விடுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X