புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளான துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 2 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐரோப்பிய நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு மார்ச் 18 முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
