புதுடில்லி: கொரோனா போன்ற நோய் தொற்றை ஏற்பட்டால் தடுப்பது, குறித்த பாட வகுப்பினை ஆன்லைன் வாயிலாக உலக சுகாதார அமைப்பு கற்றுத்தருகிறது.
சீனாவில் பரவியது 'கொரோனா' வைரஸ் இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர்;

நுாற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளர். கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. அமைப்பான (WHO) உலக சுகாதார அமைப்பு சார்பில் Infection Prevention and Control (IPC) for Novel Coronavirus (COVID-19) ஐ.பி.சி.எனப்படும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துல் துறையின் கீழ் கொரோனா மட்டுமின்றி பல்வேறு தொற்றுநோய்கள் குறித்த பாட வகுப்பினை துவங்கியுள்ளது.
இப்பாட வகுப்பில் கொரோனா போன்ற தொற்று நோய் மட்டுமின்றி பல்வேறு தொற்றுநோய்கள் எவ்வாறு பரவுகிறது, அதனை எப்படி தடுப்பது, தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை அளிப்பது மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும், சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது போன்ற தகவல்கள் பாடவகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதனை பயில விரும்புவர்கள் அதற்கான https://openwho.org/courses/COVID-19-IPC-EN இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.