ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பு : லோக்சபாவில் காங்., வெளிநடப்பு

Updated : மார் 18, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி : லோக்சபாவில், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் தொடர்பாக பேச, ராகுலுக்கு அனுமதிமறுக்கப்பட்டதை கண்டித்து, நேற்று, காங்., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.latest tamil newsலோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது:இந்திய பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. பல வங்கிகள் தள்ளாடுகின்றன. தொழில் அதிபர்கள் பலருக்கும் கடன்களை வாரி வழங்கி விட்டு, அவற்றை திரும்ப பெற முடியாமல் போனதே, வங்கித் துறையின் தோல்விக்கு முக்கிய காரணம்.
வங்கிப் பணத்தை திருடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என, பிரதமர் கூறினார். வங்கிகளில் அதிக கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாமல் உள்ள, 50 பேரின் பட்டியலை வெளியிட முடியுமா...இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச எழுந்தார். ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பதில் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாமல், அனுராக் தாக்கூர் பேசியதாவது:காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சீர்கேடு காரணமாகவே, வங்கித் துறை பாதிக்கப்பட்டுள்ளது.நரேந்திர மோடி அரசின் ஆட்சி காலத்தில், வங்கித் துறையை பலப்படுத்த, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளில், 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கி, அவற்றை திரும்ப செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினருக்கு தேவை என்றால், அந்த பட்டியலை சபையில் தாக்கல் செய்ய தயார். இவ்வாறு, அவர் பேசினார்.
இதையடுத்து, ராகுல் மீண்டும் பேச எழுந்தார். ஆனால், கேள்வி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் உள்ளிட்ட, காங்., உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதியில் நின்று கோஷமிட்டனர்; பின், வெளிநடப்பு செய்தனர்.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
17-மார்-202021:34:44 IST Report Abuse
Rasheel பேச வந்துட்டான் பெரிய மனுஷன். சொம்பை எடுத்து உள்ள வைங்க
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
17-மார்-202013:12:02 IST Report Abuse
Anand ஒரு கார்ட்டூன் படத்திற்கு ரெண்டு கோடி.... நல்ல குடும்பண்டா... எப்படி உண்ணும் உணவு செரிமானம் ஆகிறது?
Rate this:
Cancel
sripa - muscat,ஓமன்
17-மார்-202012:53:39 IST Report Abuse
sripa பப்பு யாரோ எழுதி கொட்டத்தை படிக்காதே. நீ சுயமாக உன்புதியை உபயோகித்து பின்னர் பேசவும். இந்த கோமளையை mp யாக தேர்ந்து எடுத்த வயநாடு மக்களை சொல்லணும். இனிமேலாவது ஒரு சராசரி அறிவுக்குள்ள ஒரு பிரதிநிதியை மக்களவைக்கு தேர்ந்து எடுங்கள்.
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
17-மார்-202017:38:46 IST Report Abuse
babuKerala is 100% literacy state and they elect illiterate MP from Wayanad...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X