சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

களமிறங்க வேண்டியது ரஜினி... மக்கள் அல்ல!

Updated : மார் 16, 2020 | Added : மார் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 களமிறங்க வேண்டியது ரஜினி... மக்கள் அல்ல!

வி.விஸ்வநாதன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்புள்ள ரஜினிக்கு... உங்கள் பேச்சை, தொலைக் காட்சி மூலமாக பார்க்கவும், கேட்கவும் செய்தேன். நீங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
தி.மு.க., தலைவராக இருந்த, அண்ணாதுரை, நிறைய தலைவர்களை உருவாக்கினார். அவர் இறந்த போது, கட்சித் தலைமை பொறுப்பில் தான் இருந்தார்; மற்றவர்களை, தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவர்களாக வளர அனுமதித்தார்.தி.மு.க., அரசு அமைந்தவுடன், அவர் தான் முதல்வர் பொறுப்பேற்றார்; கட்சித் தலைமையிலும் நீடித்தார். அதற்கு காரணம், முதல்வர் பதவி மேல் உள்ள மோகத்தால் மட்டுமல்ல, தான் விரும்பும் மாற்றங்கள், சரியாக நிறைவேற வேண்டுமானால், தான் தலைமையில் இருந்தால் தான் நடக்கும் என்பதற்காக!எனவே, மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அதிகாரம், உங்கள் கையில் தான் இருக்க வேண்டும்.
கட்சித் தலைமை சொல்வதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால், சோனியா தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி, மன்மோகன் சிங் மூலம் நடத்திய 10 ஆண்டு ஆட்சி தான் நினைவுக்கு வரும்.உலகம் முழுவதும், சிங்கப்பூர் துவங்கி, இந்தியா, சீனா வரை - நீங்கள் குறிப்பிடும் என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., சேர்த்து - ஆட்சியில் இருப்பவர்களிடம் தான் அதிகாரம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என்பது தான் பொருந்தும்.
மக்களிடம் எழுச்சி இருப்பதை பார்த்தால் தான் அரசியல் கட்சிக்கு வருவேன் என்று கூறுவதை விட, எழுச்சி ஏற்படுத்த விரும்பும் நீங்கள், களத்தில் இறங்குவது தான் நல்லது.கட்சியை துவங்குங்கள். கட்டமைப்பை ஏற்படுத்துங்கள்; 2021 தேர்தலுக்கு தயாராகுங்கள்.

'இட்ஸ் லேட்;பட் நாட் டூ லேட்!'வி.எஸ்.வித்யாலஷ்மி, திருவள்ளூரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் ஆட்சி, அதிகார மோகம் தலை விரித்தாடுகிறது; ஆனால், அதைக் கைகொள்ள, போதுமான திறன் இன்றி, ஏதேதோ செய்கின்றன. கம்யூனிஸ்டுகளோ, கரைந்து காணாமல் போய் விட்டனர்.
மத்திய, பா.ஜ., அரசு, ஊழல் எதுவும் இல்லாமல், உலக நாடுகளின் மதிப்பை பெற்று வருகிறது.'மக்கள் இதை புரிந்து கொண்டு, நம்மை, மண்ணோடு மண் ஆக்கி விடுவரோ...' என்ற அச்சத்தில், எதிர்க்கட்சியினர், நாட்டு நலன், நாட்டின் பாதுகாப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், அராஜகம், அட்டூழியம் செய்யத் துணிந்துள்ளனர். தவறான தகவல்களையும், அனுமானங்களையும் சொல்லி, அப்பாவிகளைத் துாண்டி, கலவரம் ஏற்படுத்துகின்றனர்.இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். 'இட்ஸ் லேட், பட் நாட் டூ லேட்!'

கண்ணாடிகளைஅப்புறப்படுத்தவிழிப்புணர்வு தேவை!
எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: மக்கும் குப்பை, மக்காத குப்பை, மின்னணு குப்பை விஷயத்தில், மக்கள் போதிய விழிப்பு இல்லாமல் இருக்கின்றனர்.கழிவு நீர் செல்லும் கால்வாயில், குப்பையை போடுகின்றனர். குப்பைத் தொட்டி, தன் வீட்டிலிருந்து தொலைவில் இருந்தால், நடந்து சென்று அதில் போட, சோம்பல், அலட்சியம்! இறைச்சிக் கழிவை, விருப்பம் போல் துாக்கிப் போட்டு, நாய்க் கூட்டத்தையும் கூட்டி விடுகின்றனர்.சாக்கடை மற்றும் நீர்வழித் தடங்களில், பாட்டில்கள், மது பாட்டில்கள், பயனற்ற டியூப் லைட்கள், குண்டு பல்புகள், சி.எப்.எல்., பல்புகள், ஆகியவையும், ஏராளமாக தென்படுகின்றன.கிராமம் முதல், பெரு நகரம் வரை, காலி கண்ணாடி பாட்டில்கள் மற்றும் 'பியூஸ்' போன பல்புகளை, வீடுகளில் இருந்து முறைப்படி வாங்கி அழிக்க, மிகப் பெரிய விழிப்புணர்வு இயக்கத்தை, உள்ளாட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.மாதம் ஒரு முறை, தெருத் தெருவாக வண்டி எடுத்துச் சென்று, பயனற்ற கண்ணாடி பாட்டில்கள், உபயோகமற்ற பல்புகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் காப்போம்; மண்ணைப் போற்றுவோம்!

செய்வாரா மோடி?
பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: மறைந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில், அதே மனித வெடிகுண்டுக்கு இரையான, மற்றவர்களின் குடும்பங்களுக்கு, பொருளாதார நிவாரணம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், அது இன்னும் வழங்கப்படவில்லை. 'அதை ஏன் இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள்?' என்று, தமிழக சட்டசபையில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., விஜயதாரணி கேட்டுள்ளார்.நியாயமான கேள்வி தான்!இறந்து போனவர், நாட்டின் பிரதமர். ஆக, நிவாரணம் கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் பொறுப்பு.மத்தியில், பா.ஜ., ஆட்சி வந்து, ஆறு ஆண்டுகள் தான் ஆகின்றன. ராஜிவ் கொலையான, 1991 முதல், 2014 ஏப்ரல் வரை, காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் வரை, நிவாரணம் கொடுப்பது குறித்து, யாருமே வாய் திறக்கவில்லை.இப்போது கூட, இந்தப் பொன்னான வாய்ப்பை, பா.ஜ.,வின் மோடி அரசு பயன்படுத்தி, நிவாரணத் தொகையைக் கொடுத்து, நல்ல பெயர் எடுக்கலாம். செய்வாரா மோடி? lllசிந்தியுங்கள்முதல்வரே!நந்திவரம் அசோகன், விருத்தாசலத்திலிருந்து எழுதுகிறார்: 'மூடப்பட்ட, 400 மதுக்கடைகளை மாற்று இடங்களில் திறக்க, அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற செய்தி படித்து, அதிர்ச்சி அடைந்தேன்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மக்களின் கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஜெ., வழியைப் பின்பற்றி அரசு நடத்துவதாகக் கூறும், முதல்வர், இ.பி.எஸ்., மூடிய கடைகளை மீண்டும் திறக்கப் போவதாகச் சொல்கிறார்.இதனால், மக்களுக்கு உடல் நலம் கெடுவதோடு மட்டுமில்லாமல், ஏழை, நடுத்தர குடும்பங்கள், நடுரோட்டுக்கு வந்து விடும்; இளைஞர்களின் எதிர்காலம் பாழாய் போய்விடும்.கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களோ சந்தி சிரிக்கும்.தாலிக்கு தங்கம் வழங்கும் தமிழக அரசே, மதுவால் உயிரிழக்கும் ஆண்களின் குடும்பத்துப் பெண்களின் தாலியைப் பறிக்கும் வேலையைச் செய்வது நல்லதில்லையே...சிந்தியுங்கள் முதல்வரே!


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
17-மார்-202010:14:52 IST Report Abuse
Thomas சொந்த வீட்டுக்கு வாடகை, வேலை செய்தவர்களுக்கு சம்பளம், அரசுக்கு வரி இப்படி எதையுமே கொடுக்காதவரா பணம் செலவழித்து கட்சி தொடங்க போகிறார். அவரையும் நம்பி இருக்கும் மக்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
17-மார்-202010:10:43 IST Report Abuse
Thomas சொந்த வீட்டுக்கு வாடகை, வேலை செய்கிறவர்களுக்கு சம்பளம் கொடுக்காதவரா, பணம் செலவழித்து கட்சி தொடங்கப்போகிறார்? சரியாக வரியும் செலுத்துவதில்லை அவர். இவரையும் நம்பி சில கூட்டம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X