சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழின் பெருமை, கலாசாரத்தின் வளமை, தமிழர் நாகரிகத்தின் பழமை என, நாமெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற, எளிய இலக்கை கூட, எட்ட முடியவில்லை.'டவுட்' தனபாலு: என்ன சார் பண்ணுறது... தேர்தலுக்கு முன்னாடி, 'தமிழ், தமிழர்'ன்னு பேசுற எல்லாருமே, தேர்தல் முடிஞ்சதும், கூட்டணி தர்மமுன்னு, 'கம்'முன்னு இருக்காங்களே... தமிழ், 'போர்வையாளர்' கும்பலை ஒழிச்சா, எல்லாம் சரியாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை.

அ.ம.மு.க., பொருளாளர் வெற்றிவேல்: அ.தி.மு.க.,வில் தொண்டர்களே இல்லையா; வாசனுக்கு, எம்.பி., பதவி கொடுத்துள்ளனர். தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். மத்திய அரசுக்கு, 'ஜால்ரா' அடித்து, அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது. 'கொரோனா' வைரஸ் விவகாரத்தில், தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அ.ம.மு.க., பற்றி, தவறான தகவல்களை, உளவுத்துறை பரப்பி வருகிறது.'டவுட்' தனபாலு: இக்கட்டான நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்த, கூட்டணிக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வாசனுக்கு, எம்.பி., பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை நம்பி வந்தவர்களை, நட்டாற்றில் கைவிட்டு வரும், தினகரன் கட்சியினர், அது குறித்து பேசலாமா என, 'டவுட்' வருதே!

அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுகின்றனர். இதை தாங்க முடியாத ரஜினிகாந்த், 'மக்கள் எழுச்சி, புரட்சி' என பேசி வருகிறார். சினிமாவில் நடிப்பவர் எல்லாம், எம்.ஜி.ஆர்., ஆக மாறி விட முடியாது. தமிழகத்திற்கு, ஒரே ஒரு, எம்.ஜி.ஆர்., தான்.'டவுட்' தனபாலு: ரஜினி ஒருபோதும், எம்.ஜி.ஆராக முடியாது; உண்மை தான். இ.பி.எஸ்., தரப்பினர் யாரும், ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களை மதிக்க மாட்டேங்கிறாங்க என்பதால் தான், 'இரட்டைக்குழல் துப்பாக்கி'ன்னு, நீங்க பேசி வாரீங்களோன்னு, 'டவுட்' வருதே!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth kumar - Jurong east,சிங்கப்பூர்
17-மார்-202019:18:44 IST Report Abuse
vinoth kumar மருத்துவர் அய்யா என்றுமே தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் அயராது படுபடுபவர் .. உங்கள் கோமாளி தனமான பதிவை பார்த்தால் , நீங்கள் மனா நலம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது போல் உள்ளது .. நல்ல மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும் ..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-மார்-202006:08:29 IST Report Abuse
D.Ambujavalli தன் குழந்தை கையிலுள்ளதைப் பிடுங்கி அடுத்தவர் குழந்தை கையில் கொடுத்தால் என்ன நடக்கும்? தேர்தலில், இன்று ரா. ச. பதவியில் ஏமாந்தவர்கள் உள்ளடி வேலை பார்த்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் நிலையும் வரலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X