சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'நாடோடிகள்' படத்தின் பாணியில் முருகனை வரவேற்று போஸ்டர்கள்

Added : மார் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'நாடோடிகள்' படத்தின் பாணியில்  முருகனை வரவேற்று போஸ்டர்கள்

கடந்த, 13, மாலை, தமிழக, பா.ஜ., தலைவர், முருகன், மாநில தலைமையகமான, 'கமலாலயம்' வந்த போது, அக்கட்சியின் மீனவரணி மாநில செயலர், சதீஷ்குமார், முருகனுக்கு ஆளுயுர மாலை, மலர் கிரீடம் அணிவித்து, வீரவாள் வழங்கி, வரவேற்றார். மாலை அணிவிக்கும் போட்டோவை, அச்சகத்திற்கு உடனே, அனுப்பி, 'நேற்று தொண்டன்... இன்று தலைவன்... இது தான் பா.ஜ.,' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டன. தி.நகர் பகுதியில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போஸ்டர்களை கண்ட தொண்டர் ஒருவர், 'அடேங்கப்பா நாடோடிகள் படத்தில், மணமக்களை வாழ்த்தி விட்டு, அரசியல்வாதி வெளியே வரும்முன், பிளக்ஸ் பேனர் வைக்கப்படுவது போல காட்சி இடம் பெறும். அந்தப் படத்தின் பாணியில், போஸ்டர் அச்சடித்து, புதிய தலைவரை குஷிப்படுத்தி விட்டனரே...' என்றார்.
மூத்த தொண்டர், 'தலைவரை, 'காக்கா' பிடிக்கிற வேகத்தை, கட்சி பணிகளிலும் காட்டினால் நல்லது...' என, கூற, மற்றவர்களும் ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17-மார்-202011:35:48 IST Report Abuse
Anantharaman Srinivasan திராவிட கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் மாறுபட்டவர்கள் இல்லை என்பதை பறைசாற்றுகிறார்கள்...
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-மார்-202006:11:41 IST Report Abuse
D.Ambujavalli இந்த ‘நேற்று தொண்டன்’ ஸ்லோகன் எல்லாம் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் சீனியர்கள் எவ்வளவு தூரம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதை போகப் போகப் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X