'ஆம்னி'யில் ஆடுறாங்க சீட்டு... 'அம்மினி' அள்ளுறாங்க துட்டு...!

Updated : ஜூன் 22, 2021 | Added : மார் 17, 2020
Advertisement
கொரோனா' விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க சித்ராவும், மித்ராவும், கலெக்டர் அலுவலகத்துக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியே சென்று கொண்டிருந்தனர்.''ஏங்க்கா... லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய யூனியன் அதிகாரியை, அமைச்சர் சிபாரிசில், 'டாலர் சிட்டி'க்கு மாத்திட்டாங்களாம்,'' மித்ரா ஆரம்பித்தாள்.''அப்போ, லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை என்னாச்சு?''''அது அவ்ளோதான்.
 'ஆம்னி'யில் ஆடுறாங்க சீட்டு... 'அம்மினி' அள்ளுறாங்க துட்டு...!

கொரோனா' விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க சித்ராவும், மித்ராவும், கலெக்டர் அலுவலகத்துக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியே சென்று கொண்டிருந்தனர்.''ஏங்க்கா... லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய யூனியன் அதிகாரியை, அமைச்சர் சிபாரிசில், 'டாலர் சிட்டி'க்கு மாத்திட்டாங்களாம்,'' மித்ரா ஆரம்பித்தாள்.''அப்போ, லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை என்னாச்சு?''''அது அவ்ளோதான்.


கோவையில இருந்தப்ப அவரு, லஞ்ச புகாரில் சிக்கியிருக்காரு. ஆனா, பணத்தோட பிடிபடாததால தப்பிச்சுட்டாரு. கரும்புள்ளி விழுந்தா, ரொம்ப துாரத்தில் 'டிரான்ஸ்பர்' செய்வாங்க''''ஆனா, மாவட்ட வி.ஐ.பி., கிட்ட பேசி, திருப்பூர் மாவட்டத்துக்கு ஆர்டர் வாங்கிட்டார். இதைப்பத்தி மினிஸ்டர்கிட்ட 'சவுத்' கேட்டதற்கு, 'கொஞ்ச நாள் வேலை செய்யட்டும், அப்புறம் பார்க்கலாம்'னு மழுப்பலா பதில் சொன்னாராம்,''''கவனிக்க வேண்டியதில், கவனிச்சா... தன்னால, காரியம் நடக்குது. இதே மாதிரி, 'வாட்ச்மேன்' பதவிக்கு 'வாரிச்சுருட்டிட்டாங்களாம்,''''எங்கே''''யூனியன் ஆபீஸ், 'வாட்ச்மேன்' வேலைக்குஇன்டர்வியூ நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் 'கை நீட்டின' ஆட்களுக்குத்தான், வேலையாம். இந்த வேலைக்கு, யூனியனை பொறுத்து, இரண்டு முதல் மூன்று 'எல்' வரைக்கும் பணம் வெளையாடுச்சாம்,''''அதுதான் தெரிஞ்ச கதையாச்சே,'' என்றாள் மித்ரா.கலெக்டர் அலுவலகத்தில், வண்டியை பார்க் செய்து விட்டு, இருவரும் நடந்தனர். அப்போது, எஸ்.பி.,யின் ஜீப் சென்றது.அதைப்பார்த்த, சித்ரா, ''அவிநாசியில் ஒரு என்.ஜி.ஓ.,வினர், பொருளாதார கணக்கெடுப்பு நடத்தினர்.
ஏரிமேடுங்கிற இடத்தில், என்.ஜி.ஓ., நிர்வாகிகிட்ட, ரெண்டு பேர், பல கேள்வி கேட்டாங்களாம்,''''அதோட விட்டாங்களா, இல்லை. பெண்ணை போட்டோ எடுத்து, ஐ.டி., கார்டுடன் பேஸ்புக்கில் போட்டுட்டாங்களாம். இதனால, மன உளைச்சலுக்கு ஆளான, அந்தப்பெண்,எஸ்.பி., கிட்ட புகார் மனு கொடுத்தாராம்,''''போட்டோ எடுக்குறது தப்பில்லையா...,'' என, ஆவேசப்பட்ட மித்ரா, தண்ணீர் குடித்துவிட்டு, ''அக்கா... பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு எந்த லெவலில் இருக்குது?'' கேள்வி கேட்டாள்.''பழைய ஒப்பந்தம், வர்ற ஒன்னாம் தேதியோட முடியுது. புதுசா போடறதுக்கு, இன்னும் பேச்சு ஆரம்பிக்கவேயில்லை,''''ஏங்க்கா... லேட்பண்றாங்க?''''அதுதான் தெரியலே. இருந்தாலும், எல்லா தொழிற்சங்கத்தினரும், கோரிக்கையை ஒட்டுமொத்தமா கொடுத்திட்டாங்களாம்.
படிச்சு பார்த்துட்டு கூப்பிடறோம்னு, சொல்லியிருக்காங்க. மே மாசம்தான் ஒரு முடிவு கெடைக்குமாம். இந்தவாட்டி, லேட்டாகறதுக்கு காரணமே, தொழில் சங்கத்துக்காரங்ளோட 'ஸ்லோவான மூவ்' தான் காரணமாம்,'' சித்ரா விளக்கினாள்.இருவரும், கல்வித்துறை அலுவலகத்தை கடந்து சென்றனர். உடனே, மித்ரா, ''கல்வித்துறை ஆபீசர் காட்டில் 'கோடை மழை' பெய்யுதாம்,'' என்றாள்.''ஏற்கனவே வெயில் கொளுத்துது.
இதில், நீ வேற ஏன்டி, சுத்தி வளைச்சு பேசறே''''இல்லக்கா... இந்த கல்வியாண்டு துவக்கத்தில், 'பிளே' 'நர்சரி' ஸ்கூலுக்கு முறையான ஆவணங்கள் இல்லாம பெர்மிஷன் கொடுத்தாராம் அந்த அதிகாரி. அதற்கு காணிக்கையா, ஒரு ஸ்கூலுக்கு, 20 ஆயிரம் வாங்கிட்டாராம். அதிகாரி இப்படி அசால்ட்டா இருக்கிறது ரொம்ப தப்பு. கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு, இவரை மாதிரி ஒரு அதிகாரிதான் காரணமா இருந்திருக்கிறார்,''''ஆமான்டி, கரெக்ட்டா சொல்லிட்டே.
இந்த வருஷமாச்சு, இன்ஸ்பெக் ஷன் பண்ணி, பெர்மிஷன் கொடுத்த பரவாயில்லை,'' சொன்ன சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.''ஹலோ, சொல்லுங்க... யாருங்க... 'காசி'ல இருந்து 'விசு' சாரா. அப்புறமா, பேசுறேன்,'' என்றவாறு போனை அணைத்தாள்.அப்போது, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள், கலெக்டரை பார்க்க சென்றனர்.அவர்கள் கடந்து சென்ற பின், சித்ரா, ''நார்த் ஆர்.டி.ஓ., ஆபீசில், டிரைவிங் ஸ்கூல்காரர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து விட்டது,''''யாராவது பொதுமக்கள் வந்தாபோதும், ஒரே அமுக்கா அமுக்கி, பணத்தை எக்கச்சக்கமாக கறந்துடறாங்களாம். இதில கூட்டணி போட்டு, கல்லா கட்றாங்களாம். சிவனின் மைந்தருக்கு தெரிஞ்சும் கூட கண்டுக்கறதில்லையாம்,''''அது கவர்மென்ட் ஆபீசா? புரோக்கர்களின் ஆபீசா?ன்னு, மக்களே கேட்கிறாங்க,''பேசி கொண்டே, இருவரும் கூட்ட அரங்கில் நுழைந்து அமர்ந்தனர். அதிகாரிகள் யாரும் வராததால், கூட்டம் தாமதமாகும் என அறிவித்தனர்.சித்ரா, அரங்கை நோட்டமிட்டாள்.
அப்போது, தி.மு.க, கரைவேட்டி நபரை பார்த்துவிட்டு, ''மித்து, இவரு, போலி பாஸ்போர்ட் கேஸில் சிக்கியவர்தானே...'' என கிசுகிசுத்தாள்.''அவரேதான். தன்னோட செயலுக்கு வருத்தம் தெரிவிச்சு கட்சியில மீண்டும் சேர்ந்துட்டாராம். உள்ளாட்சி தேர்தல்செலவுக்கு 'நா பாத்துக்கறேன்'னும் சொல்லிட்டாராம்,''''அட... இவர மாதிரி பலரையும் கட்சி பாத்திருக்கும். அதனால, இவரோட தப்பு பெரிசா தெரிஞ்சிருக்காது,'' சித்ரா கூறியதும்,மித்ரா கமுக்கமாக சிரித்தாள்.அரங்கினுள், போக்குவரத்து கழக அதிகாரி வந்தார்.
அவரை பார்த்த, சித்ரா, ''லீவு வேணுமின்னா, பணம் கொடுத்தாதான் கிடைக்குமாம்,'' என்றாள்.''எந்த டிபார்ட்மென்டில் சித்துக்கா...?''''டிரைவர், கண்டக்டர் யாராச்சும், லீவு கேட்டா, ஒரு நாளைக்கு, 200ம், 'வீக்லி ஆப்'உடன் சேர்த்து, மூனு நாள் லீவுக்கு, 500ம் வெட்டுனாத்தான் ஓகேஆகுமாம். இல்லாட்டி 'ஆப்சென்ட்,'' என சித்ராசொன்னவுடன், 'சுப்ரமணி, துரைசாமி எங்கிருந்தாலும், 'இ-பிளாக்' வரவும்,' என அறிவிப்பு ஒலித்தது.''அக்கா...இதை கேட்டதும், இதேபோல, நாச்சிபாளையத்தில் ஒரு கவுன்சிலர், சர்டிபிகேட் வாங்கித்தரேன்னு சொல்லி, ஆயிரக்கணக்கில் பணம் கறக்கிறதையே தொழிலா பண்றாராம்,''''இப்பதான், பதவிக்கு வந்திருக்காங்க. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்களா?''''ஏனுங் அம்மினி, போட்ட பணத்தை எடுக்க வேண்டாமா?'' என சிரித்த மித்ரா, ''ஆதரவற்ற பெண்கள்கிட்ட, உதவித்தொகை வாங்கித்தர்றேன்'னு 'சங்கீதம்'பாடியே, வசூல் பண்றாராம்,''''சீட்டாட்ட கும்பலை கூப்பிட்டு போலீஸ்காரங்க 'கட்ட பஞ்சாயத்து' பண்ணாங்களாம்,'' என்றாள் சித்ரா''எந்த ஸ்டேஷனுங்க்கா?'''மூலனுார் ஸ்டேஷன், ஆத்துக்கல்புதுாரில், ஆம்னி காரில் போகும் கும்பல் சீட்டாட்டம் நடத்தறாங்களாம்.
இந்த கும்பல் கிட்ட ரெண்டு பேர், ஏழு லட்சம் ரூபாய் வரை ஏமாந்ததோடு, காரும் போயிடுச்சாம்''''அதுல ஒருத்தர் புகார் செஞ்சதால், 70 ஆயிரம் மட்டும் வாங்கி குடுத்தாங்களாம். மத்தபடி, அந்த கும்பல்காரங்ககிட்ட, 'மாமூலா' போலீஸ் பண்றதை பண்ணிட்டாங்களாம்,''''போலீஸ் சப்போர்ட் இருப்பதால, அந்த ஆம்னி கும்பல் இன்னும் பல ஊர்களுக்கு போயி, 'மொபைல் சீட்டாட்டம்' நடத்திட்டு வர்றாங்க. இதில, எஸ்.பி., தலையிட்டாதான், இப்பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்,''''இந்த புட்செல் அதிகாரி ஏங்க்கா.. இப்டி இருக்காங்க?''''ஏன்டி... என்னாச்சு?''''உடுமலை, வாளவாடியில், 700 கிலோ ரேஷன் அரிசியை, வி.ஏ.ஓ., புடிச்சுட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தாராம்.
அவங்க வரலையாம். அதனால, புட்செல் ஆபீசருக்கு சொல்லியும் அவங்களும் வரலையாம். ராத்திரி ரொம்ப நேரமா காத்திருந்த வி.ஏ.ஓ.,வும் நொந்துபோய் வீட்டுக்கு போயிட்டாராம்,''''இத்தனைக்கும், அங்கே தொடர்ச்சியா, இது ரெண்டாவது இன்ஸிடென்ட். இதனால, கோபமா இருக்கிற ரெவின்யூ ஆபீசர் ஒருத்தர், கலெக்டர்கிட்ட, 'பல்லவி'பாட முடிவு செஞ்சிருக்காராம்,''''இந்த மாதிரி வேலை செய்யாத அதிகாரியை கலெக்டர்தான் கண் டுக்கணும்'' என்ற சித்ரா,
''பெருமாநல்லுாரில் போலீசை தாக்கிய ஆளும்கட்சி குண்டர்களை, வெச்சு வெளுத்துட்டாங்களாம்,''என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''நல்லா வேணும்''''நடுராத்திரி பேக்கரியில் தகராறு பண்ணிட்டு வந்த தேனி மாவட்ட ஆளும்கட்சிக்காரங்களை, ஒருபோலீஸ்காரர் கேட்டிருக்கார். அவரோட மூக்கில் குத்துனதால, மொபைல் போனில் வீடியோ எடுத்திருக்கார். உடனே, கீழே தள்ளிட்டாங்க,''''அப்புறமா தகவல் தெரிஞ்சு நாலஞ்சு போலீஸ் வந்து, மூனு பேரையும் கூட்டிட்டு போய், ஸ்டேஷனில் வெச்சு, 'சும்மா... வெளுவெளுன்னு வெளுத்துட்டாங்களாம்,'' சித்ரா கூறி முடிக்கவும், கலெக்டர் வரவும் சரியாக இருந்தது.'அனைவருக்கும் வணக்கம்...' என, கூட்டம் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X