கொரோனா தடுப்பு மருந்து யாருக்கு?: ஜெர்மனியிடம் விலை பேசும் அமெரிக்கா

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
CoronaVirus, Vaccine, Germany, Curvac, America, Trump, கொரோனா, வைரஸ், தடுப்பு மருந்து, கோவிட்19, ஜெர்மனி, அமெரிக்கா, டிரம்ப், அதிபர்

இந்த செய்தியை கேட்க

பெர்லின்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில், மருந்து குறித்து சோதனை நடைபெறும் பெறும் ஜெர்மனி நிறுவனத்தை வாங்க அமெரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதில், முதலில் மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, ஜெர்மனி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக், கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கியுள்ளது. தற்போது மருந்தை சோதனை செய்து வருவதால், சோதனை வெற்றிப் பெற்றால் வரும் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், இந்த மருந்து நிறுவனத்தை 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,412 கோடி) கொடுத்து கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையை டிரம்ப் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நிறுவனத்தை அமெரிக்கா வாங்கும் பட்சத்தில் முக்கிய நிபந்தனைகளை டிரம்ப் விதித்துள்ளதாக ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது, நிறுவனத்தை வாங்கினால், மருந்தை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யாமல் அமெரிக்காவுக்கு மட்டுமே என நிபந்தனைகளை விதித்ததாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news



இது குறித்து ஜெர்மன் பார்லி.,யின் சுகாதாரக் குழுவில் சட்டமன்ற உறுப்பினர் எர்வின் ரூடல் கூறுகையில், 'சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தான் முக்கியமானது, தேசிய சுய நலன் முக்கியமல்ல,' என்றார். ஜெர்மனி பொருளாதாரத்துறை அமைச்சர் அல்ட்மாயர், 'இது விற்பனைக்கு அல்ல, என்றார். அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறுகையில், 'தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிப்போம். அதை ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் கொடுக்கப்படும். இது தனிப்பட்ட நாட்டுக்கானது இல்லை, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PERIYASAMY MANIMARAN - ariyalur,இந்தியா
17-மார்-202019:45:25 IST Report Abuse
PERIYASAMY MANIMARAN அவனவன் செத்துக்கிட்டு இருக்கான் ஆனா அந்த ட்ரம்ப் விலை பேசுறான். இப்பதெரியுதா உலகில் பெரிய வைரஸ் அமெரிக்க தான்.
Rate this:
Cancel
ramesh babu - chennai,இந்தியா
17-மார்-202017:43:02 IST Report Abuse
ramesh babu எங்க கிட்ட மட்டும் அவ்ளோ பணம் இருந்தா , ரெண்டு சிலை செய்வோம்.....
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-மார்-202011:58:23 IST Report Abuse
Ramalingam Shanmugamஎன்ன சார் பப்பு மாதிரி பேசுறீங்க சிலை வைத்து விட்டு தயிர் வடை வைக்க வில்லையே சுற்றுலா வருமானம் வருகிறது - தமிழ் நாட்டின் சுடலை...
Rate this:
Cancel
panda - chenaai,இந்தியா
17-மார்-202016:24:37 IST Report Abuse
panda மோசமான பையன் சார் இந்த ட்ரம்ப்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X