பொது செய்தி

இந்தியா

ரோபோக்களை களமிறக்கியது கேரளா

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. முக்கியமாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.


latest tamil news



இந்தியாவில் இதுவரை மொத்தம் 125 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு, 14,944 மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


latest tamil news



இந்த வைரசை கட்டுப்படுத்த கேரளா தீவிரமாக முயன்று வருகிறது. 'பிரேக் தி செயின்' என்ற பிரசார முறையை நேற்று அறிமுகம் செய்து, உலக நாடுகளிடம் பாராட்டைப் பெற்றது.
இன்று, கொரோனாவை கட்டுப்படுத்த கேரள அரசு பொது இடங்களில் ரோபோக்களை களமிறங்கியுள்ளது. இந்த ரோபோக்கள் கை கழுவ பயன்படும் கிருமி நாசினிகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கின்றன. மேலும், இந்த ரோபோக்கள் கொரோனா குறித்த அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெரிவிக்கின்றன.




latest tamil news



கொரோனாவுக்கு எதிரான போரில், ரோபோக்களை களமிறக்கிய கேரள அரசை அனைவரும் பாராட்டி வருகின்றனர். காங்., எம்.பி., சசி தரூர் கேரளாவில் ரோபோக்கள் செயலாற்றும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பலரும் பகிர்ந்து வருவதோடு, 'மாற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்' எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மார்-202021:13:40 IST Report Abuse
யோகேஷ் அதுக்கு எதுக்கு மாஸ்க் செம கொமெடி
Rate this:
Cancel
17-மார்-202016:53:51 IST Report Abuse
Ram Pollachi ஆட்சி, அதிகாரத்தையும் ரோபோ கிட்ட கொடுத்திடவும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-மார்-202016:35:43 IST Report Abuse
RajanRajan கேரளாவின் கட்டுக்கோப்பு என்பது மற்ற மாநிலங்கள் இங்கிருந்து கற்று கொள்ளவேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
17-மார்-202017:27:48 IST Report Abuse
Balajiவாழ்க ஜாமி... இது ஏதோ ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிலோ செஞ்சிருக்கானுக ஜாமி. அப்படி மக்கள் கூடும் படியான நிகழ்ச்சிகள் நடத்துவது தப்பு இல்லியா ஜாமி? என்னத்த காத்துக்கிட்டும் என்னத்த செய்ய இப்புடி மாக்களா இருக்க சொல்லோ......
Rate this:
Hari - chennai,இந்தியா
17-மார்-202017:32:31 IST Report Abuse
Hariஅது ஒரு மேற்கு சுவர் கும்மல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X