தென் கொரியாவில் விபரீதம்: சர்ச் புனிதநீரால் பரவிய கொரோனா

Updated : மார் 17, 2020 | Added : மார் 17, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement
சியோல்: கொரோனாவை தடுக்க தென் கொரியாவில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டின் முடிவில் வழங்கப்பட்ட புனிதநீரால் 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் உயிர்கொல்லி 'கொரோனா வைரசால்' மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
CoronaVirus, SouthKorea, Church, SprayBottle, COVID19, கொரோனா, வைரஸ், கோவிட்19, தென்கொரியா, சர்ச், தேவாலயம், புனிதநீர்

இந்த செய்தியை கேட்க

சியோல்: கொரோனாவை தடுக்க தென் கொரியாவில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டின் முடிவில் வழங்கப்பட்ட புனிதநீரால் 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் உயிர்கொல்லி 'கொரோனா வைரசால்' மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 90 பேர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கொடுத்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போகவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கரோனா பரவியது தெரிய வந்தது.

இது குறித்து பாதிரியார் கிம் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
21-மார்-202020:33:00 IST Report Abuse
Indian  Ravichandran NO WORRY CHRIST WILL MUST CURE THE THAT ALL PERSONS, FROM THAMILNADU THE BIG PRIER TEAM COMING THERE WITH C D.
Rate this:
Cancel
karthikeyan.p - trichy,இந்தியா
18-மார்-202013:19:34 IST Report Abuse
karthikeyan.p கர்த்தர் பாதுகாக்கவில்லையா
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-மார்-202006:50:39 IST Report Abuse
 nicolethomson வேதனையான சம்பவம் , கிம் பதவி விலகி விடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X